(Source: ECI/ABP News/ABP Majha)
Watch video: பெரியார் சிலை விவகாரம் - துப்பாக்கியை கேட்டு போலீசிடம் திமுக நகர செயலாளர் வாக்குவாதம்
காவல்துறை அதிகாரியிடம் நீங்கள் துப்பாக்கியை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பணிகளில் ஈடுபடுகிறோம் என கூறி வாக்குவாதம்
விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான காமராஜர் சாலை, இந்த சாலையில் தலைமை தபால் நிலையம் எதிரே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட தந்தை பெரியாரின் சிலை அமைந்திருந்தது பெரியாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
Watch video: வழி தெரியாத வட இந்திய லாரி.. உரசியதில் உடைந்த பெரியார் சிலை.. விழுப்புரத்தில் பரபரப்பு
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் புனே நோக்கி சென்ற கனரக லாரி ஒன்று வழிமாறி காமராஜர் சிலைக்கு சென்றுள்ளது வழிதவறி வந்ததை உணர்ந்த ஓட்டுநர் லாரியை திருப்ப முயன்ற போது குறுகிய சாலை என்பதாலும் நீண்ட கனரக லாரி என்பதாலும் லாரியை திருப்பும் போது அங்கிருந்த பெரியார் சிலை மீது மோதியதில் பெரியார் முழு உருவச் சிலை உடைந்து கீழே விழுந்தது. இதை அறிந்த அந்த கனரக ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வாகனத்துடன் தப்பிச் சென்றுவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியை விரட்டிச் சென்று பிடித்து ஓட்டுநர் மகோந்திர சாப்பலே என்பவரை கைது செய்தனர்.
பெரியார் சிலை விவகாரம்: காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு துப்பாக்கியை கேட்ட விழுப்புரம் திமுக நகர செயலாளர். pic.twitter.com/4mJbSqVSau
— SIVARANJITH (@Sivaranjithsiva) January 22, 2022
இதற்கிடையே பெரியார் சிலை சேதம் அடைந்தது யார் இந்த நகர திமுக செயலாளர் சக்கரை தலைமையிலான திமுகவினர் சிலையை உடைத்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை சரியாக பணியை செய்யவில்லை. நீங்கள் துப்பாக்கியை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பணிகளில் ஈடுபடுகிறோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திமுக நகர செயலாளர் சர்க்கரை வாக்குவாதத்தில் ஈடுபட்டதை காவல் நிலையத்திலிருந்து போலீசார் தங்களது செல்போனில் படம் பிடித்த வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. காவல் நிலையத்தில் புகுந்த காவலர்களின் துப்பாக்கியை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்