மேலும் அறிய

விஜய் ஆட்சியில் முருகனுக்கே மொட்டை! பழனி கோயில் நிலம் ரூ.110 கோடி சுருட்டல் - மொட்டையடித்து ராமரவிக்குமார் ஆவேசம்

"மாற்றம் தருகிறோம் என்று கூறி 60 நாட்களுக்குள் பதவியேற்ற விஜய் அரசு, தற்பொழுது பழனி முருகனுக்கே மொட்டை போட்டுள்ளது" என ராமரவிக்குமார் எனக் குற்றச்சாட்டு.

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 110 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். "மாற்றம் தருகிறோம் என்று கூறி 60 நாட்களுக்குள் பதவியேற்ற விஜய் அரசு, தற்பொழுது பழனி முருகனுக்கே மொட்டை போட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டிய அவர், அதன் தொடர்ச்சியாகப் பழனி சரவண பொய்கைக்குச் சென்று, தனது தலையை அதிரடியாக மொட்டையடித்துக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.


விஜய் ஆட்சியில் முருகனுக்கே மொட்டை! பழனி கோயில் நிலம் ரூ.110 கோடி சுருட்டல் - மொட்டையடித்து ராமரவிக்குமார் ஆவேசம்

இதுதொடர்பாக பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலம் கோயில் நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு, பக்தர்களின் இலவச வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சொத்தைப் பதியக் கூடாது என்று கோயில் நிர்வாகம் மூன்று முறை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தும்,  உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, கடந்த ஜூலை 6-ஆம் தேதி சிறப்புப் பணிக்காக வந்த இணைப் பதிவாளர் இந்த நிலத்தைத் தனிநபர்கள் இருவருக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்குப் பதிவு செய்துகொடுத்துள்ளார். 

சொத்தை ஆட்டைய போட்ட தவெக அரசு


ரூ. 110 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, முழித்துக் கொண்டிருக்கும்போதே முழியைத் தோண்டுவது போல ஆட்டையப் போட்டுள்ளனர். ஊழலற்ற ஆட்சி என்று பேசும் முதலமைச்சர் விஜய், உங்கள் டிபார்ட்மெண்ட்தான் இந்த இமாலயச் சொத்தைப் பதிந்துள்ளது. பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உடனடியாகப் பழனிக்கு வர வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகளைச் சஸ்பெண்ட் செய்வது வேலையல்ல, கிரிமினல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க வேண்டும். தவறினால்  நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். 


விஜய் ஆட்சியில் முருகனுக்கே மொட்டை! பழனி கோயில் நிலம் ரூ.110 கோடி சுருட்டல் - மொட்டையடித்து ராமரவிக்குமார் ஆவேசம்

மேலும், கரூரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கோயில் இனாம் நிலங்களை, ஓட்டு நாடக அரசியலுக்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா போட்டுக் கொடுக்கத் துடிக்கும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.

 

மொட்டை போட்டு நூதனப் போராட்டம்

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததைத் தொடர்ந்து, "பழனியில் கோயில் சொத்துக்கள் தொடர்ந்து மொட்டையடிக்கப்பட்டு வருகின்றன" எனக் கூறித் தனது கண்டனத்தை வெளிப்படுத்தப் பழனி சரவண பொய்கை பகுதிக்கு ராமரவிக்குமார் சென்றார். அங்குத் திரண்டிருந்த தனது கட்சியினர் முன்னிலையில், இந்தச் சட்டவிரோதப் பத்திரப்பதிவை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், முறைகேடான சார்பதிவாளரைச் சிறையிலடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தித் தானும் மொட்டையடித்துக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget