வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கத்தின் நிலை என்ன? முதல்முறையாகப் பூங்கா நிர்வாகம் விளக்கம்!
Vandalur Zoo: "வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் மாயமான நிலையில், முக்கிய தகவலை பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது"

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாள்தோறும் 2500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், விடுமுறை நாட்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் வந்து செல்கின்றனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை பார்க்க கல்வி சுற்றுலாவிற்காகவும், தமிழ்நாடு முழுவதும் இருந்து பள்ளிக் குழந்தைகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
வண்டலூர் பூங்காவில் காடுகளுக்கு நேரடியாக சென்று அந்த விலங்குகளை பார்க்கும் வகையில், மான் மற்றும் லயன் சபாரி செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு வசதியுடன் கூடிய வாகனத்தில், பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த லயன் சபாரிக்கு பாரியாளர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதாக இருக்கிறது.
பூங்காவில் இருந்து மாயமான ஆண் சிங்கம்
லயன் சஃபாரியில் ஆறு சிங்கங்கள் இருக்கின்றன. இந்த ஆறு சிங்கங்களில் இரண்டு சிங்கங்கள் மட்டுமே சுழற்சி முறையில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க அனுமதிக்கப்படும். அந்த சமயங்களில் மீதமுள்ள நான்கு சிங்கங்கள் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும்.
அந்தவகையில் நேற்று முன்தினம் புதிதாக ஆண் சிங்கம் ஒன்று லயன் சபாரி காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது. காட்டுப்பகுதியில் விடப்படும் சிங்கங்கள் மாலை நேரமானதும் கூண்டுக்கு திரும்பி விடுவது வழக்கம். ஆனால் புதிதாக விடப்பட்ட சிங்கம் இரவு ஆகிய பிறகும் கூண்டிற்கு திரும்பாததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் சிங்கம் நேற்று காலை வரை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கா நிர்வாகம் வெளிவிட்ட பரபரப்பு தகவல்
வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்காவில்,மொத்தம் ஒன்பது சிங்கங்கள் உள்ளன. அவற்றுள் ஏழு சிங்கங்கள் (மூன்று ஆண் மற்றும் நான்கு பெண்) சிங்கங்கள் சாகசப்பாதையில் (Lion Safari) பாதுகாத்து வைக்கப்படுகின்றன, இது பார்வையாளர்களுக்கு இயற்கை அனுபவத்தை மிக நெருக்கமாக தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த லயன் சபாரியில் ஐந்து வயது ஷேர்யார் என்ற ஆண் சிங்கம் கடந்த 2023-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள பன்னேரஹட்டா உயிரின பூங்காவிலிருந்து, விலங்கு பரிமாற்ற நிகழ்ச்சியின் மூலம் வந்தது. இதுவும் சிங்க லயன் சபாரிக்கு அடிக்கடி விடுவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் 2025 அக்டோபர் 3-ஆம் தேதி மீண்டும் கூண்டு இருக்கு திரும்பவில்லை.
சிங்கம் வெளியே போகாது
அதனால் வனவிலங்கு மேலாண்மை உடனடியாக சிங்கத்தை தேடுவதற்கு குழுக்களை அமைத்தது. 4-ஆம் திகதி அந்த தேடும் குழு சிங்கத்தை லயன் சபாய் பகுதிக்குள் இருப்பதை உறுதி செய்தனர். இன்று அந்த சிங்கத்தின் பாதச்சின்னங்கள் லயன் சபாரி வளையத்திற்குள் பதிவாகியுள்ளது. இவை சிங்கம் தற்பொழுது சுற்றுச்சூழலை ஆராய்ந்து வரும் இயல்பான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட நடத்தை என்று தெரிய வருவதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில், சிங்கத்தின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய சிங்க லயன்ஸ் சபாரி பகுதியில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது, 5 தனித் குழுக்களை அமைத்துள்ளனர். பன்னாட்டுப் பகுதி எல்லை சுவர் மற்றும் சங்கிலிச்சக்கரக் கூண்டு வேலி ஆகியவையால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சிங்கம் அந்த பரப்பை விட்டு வெளியேறாது.
ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
சிங்கத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பகல் நேரத்தில் டிரோன் மூலம், இரவு நேரத்தில் வெப்பமும் படம் பிடிக்கும் டிரோன்களால் கண்காணிக்கப்படுகிறது. மேலும், அதன் இயங்குதன்மையை கண்காணிக்க 10 கேமரா பிடி வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் முந்தைய காலங்களிலும்செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சிங்கங்கள் பொதுவாக 2-3 நாட்களுக்குள்ளே பாதுகாப்பான இரவு புதைக்குள் திரும்பி வரும் நிலைமை இருக்கும்.
இன்று, PCCF மற்றும் முதன்மை வனவிலங்கு காவலர் சாகசப்பாதையை ஆய்வு செய்து, குற்றச்சாட்டு குழுக்களுடன் கலந்துரையாடி ஏற்பாடுகளை பரிசீலித்தனர். சிங்கத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய உத்தரவிட்டனர். சிங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















