மேலும் அறிய

Palamedu jallikattu | பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடு... இரண்டு மாடுபிடி வீரர்கள் ஏமாற்றி விளையாடியது அம்பலம்..

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. புகழும், சிறப்புக்கும் உரிய இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டுள்ளது. 

இதில் இந்த ஆண்டு 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் கண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பாரம்பரிய வழக்கப்படி முதலாவதாக காளையாக பாலமேடு கோயில் காளை அவிழ்க்கப்பட்டது.

கொரோனாவை காரணம் காட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியைஅமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டிகள் நடத்தப்பட்டன.. இதில், வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கி காட்டினர்..

மாலைவரை நடக்கும் இந்த போட்டியின் ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் வெவ்வேறு கலர் யூனிபார்ம் அணிந்து வந்து விளையாடி வருகிறார்கள். இதுவரை 545 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் ராமச்சந்திரன்  என்பவரும், தமிழரசன் என்பவரும் ஆள் மாறாட்டம் செய்தது அம்பலமானது. அதாவது, 17 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்த ராமச்சந்திரன் கார்த்தி என்பவரின் பனியனை போட்டுக்கொண்டு மாடு பிடித்தார்.

அதேபோல், 6 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழரசன் என்பவர் சக்கரவர்த்தி என்பவருக்கு பதிலாக மாடு பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர்.

BiggBoss 5 Tamil: 104-வது நாள்... தீர்ப்புக்கு முந்தைய நாள்.. கமல் எதிர்ப்பார்த்து காத்திருப்பது இதற்குத்தான்..

முன்னதாக, உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று பரபரப்பாக நிறைவு பெற்று, இதுவரை இல்லாத அளவிற்கு முதல் பரிசாக கார் , பைக் உள்ளிட்டவை எல்லாம் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Palamedu Jallikattu Live | பாலமேடு பாய்ச்சலுக்கு தயாரா? இன்றும் இடைவிடாத நேரலை செய்கிறது உங்கள் ABP நாடு... HD தரத்தில் கண்டு ரசிக்க கிளிக் பண்ணுங்க!

என்ன நடக்குது இங்கே... பொங்கல் ரிலீஸ் படங்களை ஓங்கி உதைத்து முதல்நாளே வசூல் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.,யின் ‛நினைத்ததை முடிப்பவன்’

Avaniyapuram Jallikattu: முடிந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... 24 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,!நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,!நாளை 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
Embed widget