BiggBoss 5 Tamil: 104-வது நாள்... தீர்ப்புக்கு முந்தைய நாள்.. கமல் எதிர்ப்பார்த்து காத்திருப்பது இதற்குத்தான்..
பிக் பாஸ் சீசனின் வெற்றியாளர் ராஜூ எனவும், இரண்டாம் இடத்தில் ப்ரியங்கா, பாவனிக்கு மூன்றாம் இடமும், நிரூப் நான்காம் இடமும் அமீர் ஐந்தாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்ஷரா, வருண், சஞ்சீவை அடுத்து ஜனவரி 9-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 104வது நாளான இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரொமோ வெளியாகி உள்ளது. இறுதி நாளுக்கான முந்தைய எபிசோட் என்பதாலும், வார இறுதி எபிசோட் என்பதாலும் கமல் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று தொகுத்து வழங்குகிறார். ப்ரொமோவில் பேசி இருக்கும் கமல், “வெவ்வேறு கனவுகளுடன் இந்த வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில் ஐவரே எஞ்சி இருக்கிறார். தீர்புக்கு முந்தைய இரவு அவர்களது மனநிலை எப்படி இருக்கும், எவ்வாறாக இருக்கும், என்ன சிந்திப்பார்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்ப்போம்” என தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் சீசனின் வெற்றியாளர் ராஜூ எனவும், இரண்டாம் இடத்தில் ப்ரியங்கா, பாவனிக்கு மூன்றாம் இடமும், நிரூப் நான்காம் இடமும் அமீர் ஐந்தாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், கடைசி நேர மாற்றம் என சொல்லியும், எதிர்ப்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று காரணம்காட்டியும் பிக் பாஸின் வெற்றியாளர்கள் மாறிப்போவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதிப்போட்டியாளர்கள் ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப்
ப்ரொமோ:1
#BiggBossTamil இல் இன்று.. #Day104 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/twmtNmp0pm
— Vijay Television (@vijaytelevision) January 15, 2022
நேரலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு காண:
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்