Palamedu Jallikattu Live | பாலமேடு பாய்ச்சலுக்கு தயாரா? இன்றும் இடைவிடாத நேரலை செய்கிறது உங்கள் ABP நாடு... HD தரத்தில் கண்டு ரசிக்க கிளிக் பண்ணுங்க!
Palamedu Jallikattu Live 2022: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை ABP நாடு யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் கண்டு பார்த்து மகிழுங்குள். அதற்கான லிங் மற்றும் விபரங்கள் உள்ளே...
உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று பரபரப்பாக நிறைவு பெற்று, இதுவரை இல்லாத அளவிற்கு முதல் பரிசாக கார் , பைக் உள்ளிட்டவை எல்லாம் வழங்கப்பட்டன. தை மாதம் விழாக்கோலம் காணும் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம், இன்று பாலமேடு கிராமத்தில் நடைபெற உள்ளது.
பரந்து விரிந்த களத்தில், பாய்ந்து வரும் காளைகளை பாலமேட்டில் பார்ப்பதே ரம்யமாக இருக்கும் என்பார்கள். மாடுபிடி வீரர்களுக்கு சவாலாக அமையும் களமாக திகழும் பாலமேட்டில் இன்று காளைகள் பாய்ச்சல் பயங்கரமாகும் இருக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக, கட்டுப்பாடுகளின் கீழ் காளைகளும், மாடுபிடி வீரர்களும் களமிறங்குவார்கள். முதல்நாள் அவனியாபுரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே விதிமுறைகள் தான், பாலமேட்டிலும் பின்பற்றப்பட உள்ளது.
அகிலம் அதிர்ந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்தை புழுதி பறக்க அப்படியே உங்கள் கண் முன் கொண்டு வந்த ஏபிபி நாடு, இன்று இரண்டாவது நாளாக தனது ஒளிபரப்பை தொடர உள்ளது. எந்த விளம்பர இடைவெளியும் இல்லாமல், எந்த இடை குறுக்கீடும் இல்லாமல், நடக்கும் நிகழ்வுகளை அப்படியே உங்களுக்கு கண் முன் கொண்டுவர உள்ளது. கண்ணுக்கு இனிமையான எச்.டி., தரத்தில், கிரிக்கெட் போட்டிகளைப் போன்றே ஆக்ஷன் ரிப்ளே உடன் உங்களுக்கு நேரில் பார்ப்பதை போன்ற அனுபவத்தை வழங்கு உள்ளது ஏபிபி நாடு.
இன்று காலை 7 மணியிலிருந்து பாலமேடு பாய்ச்சலை பார்க்க தயாராகுங்கள். காலை முதல் மாலை வரை தொடர் நேரலை.. நாளை மறுநாள் இதே நேரலை அலங்காநல்லூரிலும் தொடரும். அனைவரும் வீட்டிலிருந்து பாதுகாப்பாக பார்த்து மகிழுங்கள். பரிசு மழையும், பாய்ச்சல் காளைகளும், மாடுபிடி வீரர்களும் நம் பாரம்பரியத்தை உங்கள் கண்ணுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறார்கள்.
பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையை https://www.youtube.com/watch?v=a7ScIfCfBlo காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்