மேலும் அறிய

தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என தெரிகிறது. இவர்களை அடையாளம் கண்டு, நாளைக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தமிழ்நாடு போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்தில் வெளியேற்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என தெரிகிறது. இவர்களை அடையாளம் கண்டு, நாளைக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தமிழ்நாடு போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் இத்தனை பாகிஸ்தானியர்களா?

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் மரணம் அடைந்தனர். பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் உடனான அட்டாரி எல்லையை மூட இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் உடன் போடப்பட்டிருந்த சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு பயணம் செய்ய பாகிஸ்தானியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் வெளியேற்ற நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 180 முதல் 200 பாகிஸ்தானியர்கள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

"மனிதாபிமானத்துடன் நடத்துவோம்"

இதுகுறித்து தமிழ்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மருத்துவ அவசரநிலை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை தவிர, மற்ற அனைவரும் கூடிய விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள். மருத்துவ விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களுடன் வந்திருப்பவர்கள் உடனடியாக திரும்பி செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், மற்ற அனைவரும் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்" என்றார்.

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பாகிஸ்தானியர்கள், பெரும்பாலும் உயர் சிகிச்சைக்காகவே வருகின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் வேலூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக உள்ளூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளகாகவும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களைத் தவிர, மற்ற அனைவரும் வெளியேற வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக இங்கு இருப்பவர்களை நாங்கள் மனிதாபிமானத்துடன் கையாள்வோம்" என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!
விழுப்புரம் டூ திருவண்ணாமலை இனி ஈஸி! - தண்டரை - அடுக்கம் புதிய தார் சாலை பணிகளின் 'மாஸ்' அப்டேட்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Embed widget