மேலும் அறிய

துணிச்சலான முடிவுகள்... அதிரடி நடவடிக்கைகள்... 'சொல் அல்ல செயல்’ என நிரூபித்த அமுதா ஐ.ஏ.எஸ்..

மணல் கொள்ளையர்களைப் தடுக்கச்சென்றபோது அமுதாவை மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று இடித்து தள்ளிவிட்டுச் சென்றது. அதில் படுகாயமடைந்தார் அமுதா ஐஏஎஸ்.

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா ஐஏஎஸ் தனது பதவிக்காலத்தை பாதியிலேயே முடித்து கொண்டு மீண்டும் தமிழ்நாடு திரும்புகிறார். இதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே மத்திய அரசு அவரை பணியிலிருந்து விடுவித்ததாகவும், தமிழ்நாட்டில் அவருக்கு மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும்படியான முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மதுரையைச் சேர்ந்த 1994 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அமுதா களத்தில் இறங்கி வேலை செய்வதற்காகவும் துணிச்சலான முடிவுகளை எடுத்ததற்காகவும் பெயர் பெற்றவர். 1990களின் பிற்பகுதியில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் ராஜ்ஜியம்  இருந்தபோது சத்தியமங்கலத்தின் அடர்ந்த காடுகளுக்குள் சென்று அங்குள்ள உள்ளூர் மக்களை சந்தித்து பேசி அவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளார் துணை ஆட்சியராக இருந்த அமுதா ஐஏஎஸ்.

சென்னை பெருவெள்ளம்

2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது இவரது களப்பணிகள் பரவலாக பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது பெருவெள்ளத்திற்கு காரணமான நீர் செல்லும் வழிகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இடிக்கச் சொல்லி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். 

விரைவாக செயலாற்றி துணிச்சல் மிகுந்த முடிவுகளை எடுப்பவர் என்பதால்தான் அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் அதிகாரிகள் குழுவில் சிறப்பு அலுவலராக அமுதா நியமிக்கப்பட்டார். அப்போது திறம்பட செயலாற்றிய அவர் ஏராளமான மக்களை வெள்ள பாதிப்புகளிலிருந்து மீட்டார். மீட்பு படையினரோடு வெள்ளநீரில் இறங்கி ஏராளமான முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை விரைவாகக் காப்பாற்றினார். 

துணிச்சலான முடிவுகள்... அதிரடி நடவடிக்கைகள்... 'சொல் அல்ல செயல்’ என நிரூபித்த அமுதா ஐ.ஏ.எஸ்..

மணல் கொள்ளைத் தடுப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியராக பணியாற்றியபோது சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்தினார். அப்போது மணல் கொள்ளையர்களைப் தடுக்கச் சென்றபோது அமுதாவை மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று இடித்து தள்ளிவிட்டுச் சென்றது. அதில் படுகாயமடைந்தார் அமுதா. தொடர்ந்து இவருக்கு பல மிரட்டல்களும் வந்துள்ளன. அதற்கெல்லாம் அஞ்சாமல் பல மணல் கொள்ளை லாரிகளைப் பறிமுதல் செய்தார். 

பெண்களை ஊக்கப்படுத்திய அமுதா ஐஏஎஸ்

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தபோது பெண்களை சுய உதவிக்குழுக்களில் ஆர்வத்தோடு பங்கேற்க செய்ததோடு பெண்கல்வியையும் ஊக்குவித்தார். அதன் மூலம் தர்மபுரியில் கல்வி கற்கும் பெண்களின்  சதவீதம் கணிசமாக உயர்ந்தது. படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளைத் தேடிச்சென்று மீண்டும் கல்வி கற்க வைத்தார். அங்கு  பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அங்குள்ள பெண்களின் வளர்ச்சிக்குப் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தார். இதை பல்வேறு தருணங்களில் நினைவுகூர்ந்து அப்போது தான் எவ்வளவு திருப்தியாக உணர்ந்தேன் என அவரே சொல்லியிருக்கிறார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு

 பல சவால்களுக்கு மத்தியின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வை சென்னை மெரினாவில் அமுதா ஒருங்கிணைத்தது அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது. முதலில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க மறுப்பு தெரிவித்த அதிமுக அரசு உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் அனுமதி வழங்கியது. கருணாநிதிக்கு இறுதிச் சடங்கு மெரினா கடற்கரையில்தான் நடக்க போகிறது என்பது வெறும் 5 மணி நேரத்திற்கு முன்புதான் அமுதா ஐஏஎஸ்ஸிடம் கூறப்பட்டது. இதனிடையே லட்சக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அமுதா ஐஏஎஸ்க்கு மிகக்குறுகிய காலம்தான் இருந்ததது. மாலை 5 மணிக்குள் மிகச்சிறப்பாக அந்த இடத்தை தயார்படுத்தினார் அமுதா. தேசியத் தலைவர்கள் முதல் உயரதிகாரிகள் வரை பங்கேற்ற அந்த நிகழ்வில் எந்த பிரச்சினையும், சலசலப்பும் ஏற்படாமல் கூடிநின்ற அனைவரையும் ஒருங்கிணைத்து மிகச்சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்.  அந்த சமயத்தில் கருணாநிதி உடலின் நல்லடக்கத்திற்காக அவரது குடும்பத்தினர் மணலை எடுத்துப்போட்டபோது அமுதாவும் அந்த இறுகிய சூழலுக்கு மத்தியில் ஒரு பிடி மணலை அள்ளிப்போட்டார். அது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

துணிச்சலான முடிவுகள்... அதிரடி நடவடிக்கைகள்... 'சொல் அல்ல செயல்’ என நிரூபித்த அமுதா ஐ.ஏ.எஸ்..

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணிகளையும் திறம்பட செய்து முடித்தார் அமுதா. 

அடையாளம் கண்டுகொண்ட பிரதமர் அலுவலகம்

உணவுப் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலராக இருந்த நேரத்தில், விதிமுறைகளை மீறிய பல்வேறு உணவகங்களுக்கு சீல் வைத்தார் அமுதா. உத்தரகாண்ட் மாநிலம், முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியர் சிறப்பாக பணியாற்றினார் அமுதா. இவரது திறமையைக் கண்டு கடந்த ஆண்டு இவருக்கு பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 

தனிப்பட்ட குடும்பம்

அமுதாவின் தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவருடைய அப்பா மத்திய அரசு ஊழியர். கணவர் ஷம்பு கலோலிகரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவருடைய அண்ணன் குமரன் ஐ.எஃப்.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் தமிழகத்துக்கே திரும்பும் திறமைவாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா ஐஏஎஸ்க்கு எந்த துறையில் என்ன பதவி வழங்கப்படும் என்பதை பல்வேறு தரப்பினரும் உற்றுநோக்கி வருகின்றனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
Embed widget