உணவு வேணுமா எடுத்துக்கோங்க.. மயிலாடுதுறையில் இப்படியும் ஒரு சேவை
பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏராளமான ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஜேசிஐ மயிலாடுதுறை மற்றும் டெல்டா சங்கம் சார்பில் ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சமூக நல அமைப்பு சார்பில் தேவைப்படுவோர் எடுத்துச்செல்லும் வகையில் உணவுப் பொட்டலங்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏராளமான ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஜேசிஐ மயிலாடுதுறை மற்றும் டெல்டா சங்கம் சார்பில் ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சங்கத்தலைவர் பிரபாகரன் தலைமையில் மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை அடுக்கிவைத்துள்ள அச்சங்கத்தினர், தேவைப்படும் மக்கள் உணவை வீணாக்காமல் எடுத்துச் செல்ல அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். முதல்நாள் இத்திட்டத்தை மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் பங்கேற்று ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி தொடக்கிவைத்தார்.
கொரோனா பொதுமுடக்கம் முடியும்வரையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தினசரி 100 பொட்டலங்கள் இங்கு வைக்கப்படவுள்ளன. இதனை தேவைப்படுவோர் எடுத்துச்செல்லலாம்.