மேலும் அறிய

இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி தர முயலும் ஓபிஎஸ்...அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து 3 வழக்குகள்..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. வரும் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு:

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த விவகராத்தில், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித்தனியே மனு  தாக்கல் செய்துள்ளனர்.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு மாலையிலேயே சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் மட்டுமின்றி நீதிமன்றத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர். கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும் பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை காலை விசாரணை:

நீதிபதி கே. குமரேஷ்பாபு முன்பு நாளை காலை 10 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. வார இறுதி நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் போட்டியிட விரும்புவோரை சட்டவிரோதமாக தடுத்துள்ளனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ள ஓபிஎஸ், "எதுவுமே முறைப்படி இல்லாமல் பிக் பாக்கெட் அடிப்பது போல இருக்கிறது அவர்களது செயல்பாடுகள். இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் பொதுக்குழுவை அங்கீகரிக்க வில்லை. 

மக்களும் தொண்டர்களும் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து இருந்திருந்தால் ஈரோடு கிழக்கு தேர்தலில் வென்றிருக்க வேண்டும். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கழகத்தை தோல்வி பெற செய்தவர் எடப்பாடி. அடிப்படை மக்கள் தலைவர்கள்தாம் என்ற கட்சி விதியை மாற்றி மிட்டாதார் மிராசுதார் போல தன்னை சுற்றி உள்ளவர்கள் மட்டும் தலைமை பொறுப்புக்கு வரும் வகையில் விதிகளை மாற்றி உள்ளனர்" என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர முயற்சி:

அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது முதல் இ.பி.எஸ். தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தோல்விகள் காரணமாகவும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் தரப்பினரின் வியூகம் காரணமாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs USA: சூப்பராக விளையாடி சூர்யகுமார் யாதவ் அரைசதம்.. அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8ல் நுழைந்த இந்திய அணி..!
சூப்பராக விளையாடி சூர்யகுமார் யாதவ் அரைசதம்.. அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8ல் நுழைந்த இந்திய அணி..!
Anurag Kashyap: “வெற்றுப் பெருமை பேசும் இந்தியா.. விருது வென்ற படங்களுக்கு என்ன செஞ்சீங்க” - அனுராக் காஷ்யப் ஆதங்கம்!
Anurag Kashyap: “வெற்றுப் பெருமை பேசும் இந்தியா.. விருது வென்ற படங்களுக்கு என்ன செஞ்சீங்க” - அனுராக் காஷ்யப் ஆதங்கம்!
The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!
The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!
அதிமுகவுடன் அமமுக இணையவே இணையாது... பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
அதிமுகவுடன் அமமுக இணையவே இணையாது... பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Pawan Kalyan Profile | மோடியின் செல்லம்..சந்திரபாபுவின் ’சேகுவாரா’! பவர்ஸ்டார் வென்ற கதைPMK Vs BJP | உடையுமா பாஜக கூட்டணி? அடம்பிடிக்கும் அன்புமணி சூடு பறக்கும் விக்கிரவாண்டிMK Stalin | 40 ஜெயிச்சா போதுமா? ஓட்டு வங்கியில் ஓட்டை!கலக்கத்தில் உ.பிக்கள்!Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs USA: சூப்பராக விளையாடி சூர்யகுமார் யாதவ் அரைசதம்.. அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8ல் நுழைந்த இந்திய அணி..!
சூப்பராக விளையாடி சூர்யகுமார் யாதவ் அரைசதம்.. அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8ல் நுழைந்த இந்திய அணி..!
Anurag Kashyap: “வெற்றுப் பெருமை பேசும் இந்தியா.. விருது வென்ற படங்களுக்கு என்ன செஞ்சீங்க” - அனுராக் காஷ்யப் ஆதங்கம்!
Anurag Kashyap: “வெற்றுப் பெருமை பேசும் இந்தியா.. விருது வென்ற படங்களுக்கு என்ன செஞ்சீங்க” - அனுராக் காஷ்யப் ஆதங்கம்!
The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!
The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!
அதிமுகவுடன் அமமுக இணையவே இணையாது... பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
அதிமுகவுடன் அமமுக இணையவே இணையாது... பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டம்
Prabhas: பிரபாஸ் ஒரு சோம்பேறி... திருமணம் செய்யாதது குறித்து இயக்குநர் ராஜமெளலி பகிர்ந்த ரகசியம்
Prabhas: பிரபாஸ் ஒரு சோம்பேறி... திருமணம் செய்யாதது குறித்து இயக்குநர் ராஜமெளலி பகிர்ந்த ரகசியம்
Pawan Kalyan: சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் பவர் ஸ்டாரான பவன் கல்யாண்: தோல்வி முதல் வெற்றி பயணம் வரை
Pawan Kalyan: சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் பவர் ஸ்டாரான பவன் கல்யாண்: தோல்வி முதல் வெற்றி பயணம் வரை
கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் பறந்த கார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்
கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் பறந்த கார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்
Watch Video: நடுவர் கொடுத்த மோசமான தீர்ப்பு! ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறிய இந்தியா..!
நடுவர் கொடுத்த மோசமான தீர்ப்பு! ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறிய இந்தியா..!
Embed widget