EPS on 10.5 Reservation: 10.5% இட ஒதுக்கீடு: மூத்த வழக்கறிஞர்கள் வைத்து வாதாடவில்லை - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
”இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி சமூக நீதி நிலைநாட்டப்படும்” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு என்பது மாநிலத்தின் சமூக நீதி உரிமை பிரச்னை. எனவே, இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி சமூக நீதி நிலைநாட்டப்படும்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ், “முந்தைய அதிமுக ஆட்சியில் அவசரமாக 10.5% இட ஒதுக்கீடை கொண்டு வந்து முறையாக நிறைவேற்றவில்லை என சட்டமன்றத்தில் ஸ்டாலின் பதிவு செய்திருக்கின்றார். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொண்டு வர வேண்டும் என புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும், அம்மா காலத்திலும், அவரது மறைவிற்கு பிறகும் அதை கடைபிடித்து வருகிறோம். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்து வாதாடவில்லை. மதுரை உயர்நீதிமன்றத்தில் சரியான தரவுகளை அரசு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கவில்லை. இதனால்தான் இந்த தீர்ப்பு நமக்கு எதிராக வந்தது. இந்த தீர்ப்பை வைத்துதான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். ஆனால், இப்போது முதலமைச்சர் சொல்லி இருப்பதுபோல மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடுவோம் என்று சொல்கிறார். அப்படி என்றால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதாடும்போது மூத்த வழக்கறிஞர்களை வைத்து ஏன் வாதாடவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற முக்கியச் செய்திகள்:
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்து பேச வேண்டாம் - கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்https://t.co/wupaoCzH82 | #MullaPeriyarDam #SupremeCourt pic.twitter.com/rFPRPx5zpL
— ABP Nadu (@abpnadu) April 7, 2022
#BREAKING |
— ABP Nadu (@abpnadu) April 7, 2022
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு என்பது மாநிலத்தின் சமூக நீதி உரிமை பிரச்னை. ..
எனவே, இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி சமூக நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும்.
-பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #MKStalin #VanniyarReservation pic.twitter.com/10h1kzOeOn
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்