வடகிழக்கு பருவமழை எதிரொலி: கரூரில் கொட்டித்தீர்த்த மழை - வாகன ஓட்டிகள் அவதி
வடகிழக்கு பருவமழை எதிரொலியால் கரூர் பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை. இரண்டு சக்கர வாகனங்களில் பயணித்தவர்களும் மழையின் காரணமாக அவதிப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூரில் ஒரு மணி நேரம் இடைவிடாது கனமழை
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக கரூர் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது.
இந்நிலையில் காலை முதல் வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் கழிவு நீருடன், மழை நீரும் சேர்ந்து வடிகால்களில் சென்றதோடு, ஒரு சில பகுதிகளில் குடியிருப்புகளிலும் புகுந்தது. மேலும், பல்வேறு வேலை நிமித்தமாக நகரப் பகுதிகளில் நடந்தும் இரண்டு சக்கர வாகனங்களில் பயணித்தவர்களும் இந்த மழையின் காரணமாக அவதிப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கரூர் மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அதே சமயம் அதிகமாக மழை பெய்தால் நாங்கள் விளைநிலங்களில் போட்டு
ஒரு மணி நேரம் மழை
கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், மாலை நேரம் மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளும் வீடு திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பிறகு கரூர் டவுன், வெள்ளியணை, வாங்கல், வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன், சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு. கரூர் 03.02 மில்லி மீட்டர், குளித்தலை 02.00 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரம் 06.04 மில்லி மீட்டர், மாயனூர் ஐந்து மில்லி மீட்டர், கடவூர் 04.00 மில்லி மீட்டர், பாலவிடுதி 09.02 மில்லி மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 02.48 மில்லி மீட்டர் மழை பதிவானது.