(Source: ECI/ABP News/ABP Majha)
வடகிழக்கு பருவமழை - கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: மாவட்ட வாரியாக முழு விபரம்!
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் இந்த அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் - அருண் ராய்
திருச்சி - ஜெயகாந்தன்
வேலூர் - நந்தகுமார்
நாகப்பட்டினம் - பாஸ்கரன்
மதுரை - வெங்கடேஷ்
ராணிப்பேட்டை - செல்வராஜ்
திருவள்ளூர் - ஆனந்த குமார்
அரியலூர், பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்
விருதுநகர் - காமராஜ்
ஈரோடு - பிரபாகர்
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் இந்த அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.
முன்னதாக,12 மாவட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, வேலூர் மாவட்டத்திற்கு கூடுதல் டிஜிபி அமரேஷ் புஜாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு ஐஜி கபில்குமார் சரத்கர், சேலம் மாவட்டத்திற்கு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திற்கு ஏடிஜிபி வன்னியபெருமாள், திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏடிஜிபி வினித்தேவ் வான்கடேவும், மதுரை மாவட்டத்திற்கு ஏடிஜிபி ஜெயராம், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஐஜி சுமித்சரண், நெல்லை மாவட்டத்திற்கு ஐஜி அபின் தினேஷ் மோடக் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஐஜிக்கள் தினகரன், அருண் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகளை துரித்தப்படுத்துவார்கள்.
மேலும் செய்திகள் படிக்க: Watch Video | அழகா.., க்யூட்டா ஒரு டான்ஸ்..! இன்ஸ்டாவை உருக வைத்த பிவி சிந்து..!!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்