Oxygen | ஒடிசாவில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது..
தமிழகத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்திசெய்யும் வகையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து டேங்கர்களில், ரயில்கள் மூலமாக கொண்டுவரப்பட்டது.
தமிழகத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்திசெய்யும் வகையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து டேங்கர்களில், ரயில்கள் மூலமாக கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கொரோனா பரவலைத்தடுக்க வீடுவீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
தற்போதைய இரண்டாவது அலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதனாலேயே அடுக்கடுக்கான உயிர்களைப் பறிகொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. மிகவும் வருந்தத்தக்க இந்தப் பேரிடர் சூழலில், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க அரசுடன் இணைந்து சில தனியார் தொண்டு நிறுவங்களும், அமைப்புகளும், தனி நபர்களும் உதவி வருகின்றனர்.
அந்த வகையில், `தி ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் அசோசியேஷன் (JITO)’ அமைப்பினர், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, நடமாடும் ஆக்சிஜன் வாகனப் பயன்பாட்டை 'Oxygen on Wheels' அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் இந்த வாகனம் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது. அதே போல் பிற மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜன் லாரி மூலம் வந்துகொண்டுவரப்படுகிறது.
தென்மாவட்டமான தூத்துக்குடிக்கு தேவையான 40 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் 5 டேங்கர்களில் ரயில்கள் மூலமாக ஒடிசா மாநிலத்தில் இருந்து மதுரை மார்க்கமாக கொண்டுவரப்பட்டது. டேங்கர்களானது நீளவெட்டான் ரயில்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலமாக அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
5 டேங்கர்களுடன் மதுரை ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலில் ஆக்சிஜன் சிலிண்டர்களை மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டனர். டேங்கர்களை எடுத்துச்செல்வதில் உள்ள நடைமுறைகள் குறித்தும், ரயில்வே பாதை மின்தடம் குறித்தும் ரயில்வே பைலட்களிடம் கேட்டறிந்தனர்.