”கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை” - கோவா அமைச்சருக்கு நிதியமைச்சர் பிடிஆர் விளக்கம்
தற்போது, நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி மாநில சுயாட்சிக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி மன்ற கூட்டத்தில் தமிழக நிதிஅமைச்சர் முன்வைத்த கருத்துக்கள், கோவா மாநில மக்களை சிறுமைப்படுத்தியுள்ளதாக அம்மாநில போக்குவறுத்துத் துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. கோவா மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
I was witness to a highly objectionable behaviour of the representative of DMK-@INCIndia alliance Govt of Tamil Nadu in GST Council Meet where, attempt was made to snub Goa's view because of being a Small State. This is against the democratic principles & Goans demand an apology.
— Mauvin Godinho (@MauvinGodinho) May 29, 2021
இந்நிலையில், கோவா மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை என்று நிதியமைசச்சர் பிடிஆர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பல்வேறு துறைகளின் மூலம் 8 கோடி தமிழ் மக்களுக்கு பணி புரியிம் இடத்தில் இருக்கும் நான், பொதுவாக அரசியல் தலைவர்களின் தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிப்பதை தவர்த்து வருவது வழக்கம். ஆனால், இரண்டு முக்கிய காரணங்களுக்கு மட்டுமே கோவா போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். இதற்கு, முக்கிய இரண்டு காரணங்கள் உள்ளன. முதாலாவதாக, ஜிஎஸ்டி மன்றக் குழு கூட்டத்தில், கோவா மாநில மக்களை சிறுமை படித்திவிட்டதாகவும், இவ்வாறான எனது கருத்துக்களை தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும் என்று குற்றஞ்சட்டியுள்ளார். இரண்டாவதாக, இதுபோன்ற சில நபர்களால், ஒட்டுமொத்த ஜிஎஸ்டி மன்றக் குழு கூட்ட அமைப்பையும், அதன் செயல்பாடுகளையும் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
எனது கட்சியின் சார்பாக, நான் இரண்டு முக்கிய நிலைப்பாடுகளை கொண்டுள்ளேன்.
1. ஜிஎஸ்டி மன்றத்தின் "ஒரு மாநிலம் , ஒரு வாக்கு" எனும் கொள்கை மூலம் ஜிஎஸ்டி மன்றம் பெரிய, வளர்ந்த மாநிலங்களுக்கு பல வகைகளில் அநீதி இழைக்கின்றது.
2. திராவிட இயக்கத்தின் சுய மரியாதை கொள்கையின் தொடர்சியாக மாநில சுயாட்சி உள்ளது. தற்போது, நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி மாநில சுயாட்சிக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நேற்றைய, 28.05.2021 அன்று நடைபெற்ற GST மன்ற கூட்டத்தில் நான் முன்வைத்த அனைத்து கருத்துகளும் இதன் அடிப்படையில் தான் இருந்தன. இத்தகைய நிலைப்பாடுகளை கொண்டதால் தான், எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் (ENA) மீதான சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற உத்தர பிரேதேசம், ஆந்திரா பிரடதேசம், கோவா போன்ற மாநிலங்களின் கோரிக்கைக்கு தமிழகம் ஆதரவளித்தது. இந்த முடிவு, தமிழகத்திற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தினாலும், எங்கள் நிலைப்பாடுகளில் இருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. ( ENA பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்தால் தமிழகம் அதிகப்பயனடையும்)
Epic trolling and massively entertaining.. Thanks to @ptrmadurai for making politics this stylish and brutal. 🔥🔥🔥💯😂 https://t.co/phvpZ3SJiT
— ʎɯɐsɐpuɐʞ ɐuǝǝɯ || stand with #palestine 🇵🇸 (@meenakandasamy) May 30, 2021
மனிதாபிமான அடிப்படையில், மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசிகள், கொரோனா மருந்துகள் மீது பூஜ்ய வரி விகிதத்தினை விதிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை கோவா அமைச்சர் கடுமையான முறையில் விமர்சித்தார். மற்ற மாநிலங்களின் கருத்துக்களை கூற விடாமல், தெளிவற்ற, மமதையான முறையில் தன்னுடைய சொந்த கருத்துக்களை திரும்ப திரும்ப முன்மொழிந்து கொண்டிருந்தார்.
வேண்டா வெறுப்புடனும், மனக்கசப்புடனும் ஒன்றிய அரசு செயல்படக்கூடாது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
எந்த காரணத்திற்காகவும் நான் கோவா மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவையில்லை. உண்மையில் சொல்ல போனால், நான் கோவா மாநில அரசின் தன்னாட்சி உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
ஆனால், இதுபோன்ற ஒரு அமைச்சர் ஜிஎஸ்டி மன்ற கூட்டத்தில், கோவா போன்ற ஒரு அழகான மாநில மக்களின் பிரதிநியாக உள்ளார் என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி பேதங்களைக் கடந்து பாரதிய ஜனதா கட்சிக்கு நான் சில வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி வரும் காலங்களில், சில அடிப்படை தகுதிகளை கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகள்" என்று தெரிவித்தார்.