மேலும் அறிய

சசிகலா ஆதரவாளர்கள் மீதான கொலை மிரட்டல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - சி.வி.சண்முகம்

எனக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை ஸ்டாலின் அரசு அதனுடைய டிஜிபி, உள்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - சிவி சண்முகம்

கடந்த 2021ம் ஆண்டு ஜீன் மாதம் சசிகலா குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை சிவி சண்முகம் தெரிவித்து இருந்தார். இதனால் சசிகலா மற்றும் அவரது ஆதர்வாளரகள் சி.வி.சண்முகம் அவர்களுக்கு பல முறை கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ரோஷனை காவல் நிலையத்தில் கடந்த 09.06.2021 அன்று புகார் மனு அளித்திருந்தார், இந்த புகார் மனு மீது 25.06.2021 அன்றுகொலை மிரட்டல், அவதூறாக பேசியது, கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த வழக்கானது கடந்த 10.12.2021 அன்று பொய் புகார் மனு காவல்துறையின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது, அதற்கான சமன் திண்டிவனம் நீதிமன்றத்தின் மூலமாகவே அனுப்ப வேண்டும் ஆனால் ரோஷனை காவல்துறையினர் 19.03.2023 அன்று சிவி சண்முகத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உள்ளனர், 30-03-2023 அன்று அதனை எதிர்த்து திண்டிவனம் நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை திண்டிவனம் நீதிமன்றம் 1-இல் நீதிபதி கமலா முன்னிலையில் 06-04-23 அன்று விசாரணைக்கு வந்தது, விசாரணைக்கு பிறகு வழக்கை   12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கமலா உத்தரவிட்டிருந்தார்,  இதனை அடுத்து நேற்றைய தினம் சிவில் சண்முகம் நேரில் ஆஜர் ஆவதற்கான காரணம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது, நிலையில் இன்று மீண்டும் நேரில் ஆஜராகினார்..

செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம் :

சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை இதுவரை  விசாரிக்காமல் எவ்வித நடவடிக்கையும்  எடுக்காமல் பல்வேறு வகையில் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் விடுப்பது குறித்து பலமுறை  இச்சம்பவம் நடைப்பெற்றது. இதுக்குறித்து திண்டிவனம் ,சென்னை,  காவல் நிலையத்திலும் விழுப்புரத்திலும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த புகார்கள் மீதும் இதுவரை திமுக அரசு அதனுடைய காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஒரு சில புகார்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பினை விளக்கியதற்கான காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு மீண்டும் கையாளாகாத விடியா அரசு ஆள தெரியாத, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தெரியாத ஸ்டாலின் அரசை நம்பி எதிர்பார்த்து நான் இல்லை, திரும்பவும் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கவும் இல்லை அதற்கான தேவையும் இல்லை பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என வழக்கு தொடுக்கவில்லை.

எனக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை ஸ்டாலின் அரசு அதனுடைய டிஜிபி, உள்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய வழக்கை என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தமிழக காவல்துறை தலைவரை பதில் கொடுக்க உத்தரவு விடுக்கப்பட்டது. இதனால் உத்தரவிடப்பட்டது தொடர்ந்து நான் எங்கெல்லாம் புகார் கொடுத்தேனோ அங்கெல்லாம் புகார்களை வேக வேகமாக முடிக்க முயற்சிக்கிறார்களே தவிர,  ஒரு வழக்கை கூட விசாரிக்கவில்லை இதுவரை 15 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எந்த  புகார்கள் மீதும், எதிர் தரப்பினர் மீதும் நேரடியாக விசாரிக்கவில்லை என்றார்.

இந்நிலையில் இந்த குறிப்பிட்ட வழக்கு சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள போன் கால்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட புகார் மீது இதுவரை என்னையும் விசாரிக்கவில்லை, புகார் மீதும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் புகார் மீது விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக பொய்யான தகவலை கையாளாகாத ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை முடித்து வைத்ததாக மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் இந்த புகார் மீதான புகாரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மறு விசாரணை செய்யப்பட வேண்டும் என சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Embed widget