மேலும் அறிய

நாடே பார்த்து வியக்கும் என்எல்சி.. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் புரட்சி!

1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்த நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகும்.

மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியா லிமிடெட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் 10-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு, செப்டம்பர் 28ஆம் தேதி, நிறுவனம் நெய்வேலியில் 10 மெகாவாட் சூரிய ஒளிமின்னழுத்த மின் நிலையத்தை இயக்குவதன் மூலம் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தைத் தொடங்கியது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், என்எல்சி இந்தியா நிறுவனம்  (என்.எல்.சி.ஐ.எல்) இந்தியாவின் எரிசக்தி நிலப்பரப்பை சீராக மாற்றி வருகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் புரட்சி: 

இந்தியா "மெகாவாட்டிலிருந்து" ஜிகாவாட்டுக்கு மாறியதால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி வலுவான மாற்றம் தேவை என்று 2015 ஆம் ஆண்டில் பிரதமர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, என்.எல்.சி இந்தியா நிறுவனம் 1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்த நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனம் ஆனது. 

பழுப்பு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 1380 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், 51 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இறங்கியுள்ளது.

என்.எல்.சி.ஐ.எல் நிறுவனம் 1234 கோடி யூனிட் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் 1 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை குறைந்த, நீடித்த மின்சாரத்தை வழங்கி லட்சக்கணக்கானோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள், 10,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை எட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் புதிய துணை நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.

நாடே பார்த்து வியக்கும் என்எல்சி:

என்.எல்.சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்.ஐ.ஆர்.எல்) சொத்துக்களை பணமாக்குவதில் கவனம் செலுத்தும், என்.எல்.சி இந்தியா கிரீன் எனர்ஜி லிமிடெட் (என்.ஐ.ஜி.இ.எல்) தூய்மையான எரிசக்தி முயற்சிகளை முன்னெடுக்கும்.

மேலும், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில்  என்.எல்.சி.ஐ.எல் நிறுவனம் உறுப்பினராக இருப்பது நிலக்கரித் துறையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியின் வழிகாட்டுதலின் கீழ், என்.எல்.சி.ஐ.எல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது.

சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், எரிசக்தி சேமிப்பு அமைப்புகள், பசுமை ஹைட்ரஜன், நீரேற்று சேமிப்பு நீர்மின் திட்டங்கள், பழுப்பு நிலக்கரியிலிருந்து மெத்தனால் மாற்றம், சுரங்கத்திலிருந்து மணல் முன்முயற்சிகள் மற்றும் முக்கியமான கனிம ஆய்வு ஆகிய திட்டங்களை இது தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget