Ooty-Gudalur Road: நிலச்சரிவு அபாயம்.. ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Ooty-Gudalur Road: அத்தியவசிய தேவை மற்றும் அவசர கால உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றுக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கபடுவதாக மாவட்டா ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை:
தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், உதகை மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக உதகை செல்லும் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுவதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்ப்பட்டது, ஊட்டி-கல்லட்டி சாலையில் திடீரென்று 20வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத பாறை விழுந்ததில் விரிசல்சாலையில் ஏற்ப்பட்டது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் போக்குவரத்தானது சீர் செய்யப்பட்டது.
களத்தில் நம் அரசு
— Collector & DM, The Nilgiris (@collrnlg) May 28, 2025
நீலகிரி மாவட்டத்தில் பெய்து கனமழையால் கல்லட்டி சாலையில் பாறைகள் விழுந்து சேதமடைந்தது , இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினரால் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து திறக்கப்பட்டது#TNMonsoonPreparedness2025#nilgiris #ooty @TNDIPRNEWS pic.twitter.com/wTTCrIIStG
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
இந்த தொடர் கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட மாவட்ட நிர்வாகமானது உத்தரவிட்டது.
மண் சரிவு அபாயம்:
இந்த நிலையில் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம்-கூடலூர் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்ப்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் தற்காலிமாக வாகன போக்குவரத்துக்கு சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
Southwest Monsoon alert for Nilgiris District public and Tourist#TNMonsoonPreparedness2025#nilgiris #ooty #nilgiriscollector #disasterpreparedness #DisasterManagement pic.twitter.com/YbtM6ai3Ph
— Collector & DM, The Nilgiris (@collrnlg) May 28, 2025
இந்த சாலையில் உள்ள அபாயகரமான பாறை உருண்டு விழ வாய்ப்புள்ளதால் அதனை அகற்றும் வரையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசுப்பேருந்துகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இதுமட்மில்லாமல் அத்தியவசிய தேவை மற்றும் அவசர கால உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றுக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.






















