Rain Alert: சட்டென மாறும் வானிலை.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை எச்சரிக்கை!
தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையும் பெய்து வருவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Five days forecast for Tamilnadu, Puducherry & Karaikal pic.twitter.com/Dw2TN7g56x
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 20, 2022
அதன்படி இன்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 20 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னனுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர்,நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்துர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் ஜூலை 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Five days forecast for Tamilnadu, Puducherry & Karaikal pic.twitter.com/uUhsAzoZvv
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 20, 2022
ஜூலை 22 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்