மேலும் அறிய

குடவரை கோயில்கள் முதல் டேனிஷ் கோட்டை வரை - அமைச்சர் தங்கம் தென்னரசுவின் புதிய அறிவிப்புகள்

முற்கால பாண்டியர் கால 10 குடைவரை கோயில்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கலைப்பண்பாட்டுத்துறை, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய கலைப்பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துறைசார்ந்து கீழ்கண்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கலைப்பண்பாட்டுத்துறை அறிவிப்புகள் 

  1. பிரம்மாண்டமான நாட்டுப்புற கலைவிழாவான நம்ம ஊரு திருவிழா சென்னையோடு, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் 6 கோடி மதிப்பில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் கலைஞர்கள் மாவட்ட அளவில் விழாக்கள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
  2. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் 20 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான இணைய வழி சேவையை தொடங்கும் 
  3. பூங்காக்கள், கடற்கரைகள் அருங்காட்சியகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலைகள் வளர்க்கப்படும்
  4. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி கலையரங்கம் 1.43 கோடியில் புணரமைக்கப்படும்
  5. கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி கட்டிடங்கள் 1 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் 
  6. சென்னை அரசு கவின்கலைக்கல்லூரியின் பாரம்பரிய கட்டிடங்கள், இதர கட்டிடங்கள் 7.33 கோடி மதிப்பில் புணரமைக்கப்படும் 
  7. கும்பகோணம் கவின்கலை கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் விதிமுறைகள் படி 15.68 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்
  8. கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகள், இசைப்பள்ளிகள், ஜவஹர் சிறுவர் மன்றத்திற்கு இசைக்கருவிகள், மின்னனு சாதனங்கள், துணை சாதனங்கள், கணினி, ஒலிப்பதிவுக் கூடங்கள் மென்பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் 6 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்
  9. வாடகை கட்டிடத்தில் இயங்கும் கடலூர் இசை பள்ளிக்கு 1.60 கோடியில் புதிய கட்டிடம் 
  10. சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் உள்ள பாரம்பரிய கட்டிடமான ப்ளாடிகேசில் 2.8 கோடியில் புணரமைக்கப்படும்
  11. மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிறப்பு கலைக்கல்லூரி சிற்ப அருங்காட்சியகம் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு மாணவர்களின் சிற்பங்கள், ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் 
  12. தமிழ்நாடு இயல்,  இசை, நாடக மன்றத்தின் அலுவலக கட்டடம் 1.54 கோடியில் மேம்பாடு
  13. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மூலம் சென்னை மற்றும் பிற 10 மாவட்டங்களில் 50 லட்சம் மதிப்பில் நாட்டுப்புற கலைகளை காட்சிப்படுத்தும் பொங்கல் விழா நடத்தப்படும்

அருங்காட்சியகங்கள் துறை 

  1. சென்னை அருங்காட்சியக படிம கூடங்கள் மிகச்சிறந்த அருங்காட்சியக நடைமுறைப்படி 7 கோடி செலவில் மேம்படுத்தப்படும் 
  2. சென்னை அருங்காட்சியக சின்னமாக திகழும் அருங்காட்சியக கலையரங்கில் குளிர்சாதன கருவிகள், மின்னனு சாதனங்கள்,  இருக்கைகள், தீ பாதுகாப்பு கருவிகள் ஆகியவை மேம்படுத்தி மீண்டும் கலை நிகழ்ச்சி நடத்த 3 கோடி செலவில் பணிகள் செய்யப்படும்
  3. காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் சுற்றுலா விளக்க கட்டிடத்தில் மாற்றியமைக்கப்பட்டு புதிய காட்சி கூடங்கள் மேம்படுத்தும் பணிகள் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
  4. நாகப்பட்டினம் மாவட்டம் அரசு அருங்காட்சியகம் தற்போது செயல்பட்டு வரும் தனியார் கட்டத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான பாரம்பரிய கட்டடத்தை மீட்டுருவாக்கி அங்கு மாற்றி அமைக்கும் பணிகள் 1.04 கோடி செலவில் மேம்படுத்தப்படும் 
  5. சென்னை அருங்காட்சியக வேதியியல் பாதுகாப்பு ஆய்வகம் 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் 
  6. சென்னை அரசு அருங்காட்சியக பாரம்பரிய சுற்றுச்சுவரின் விழுந்த பகுதிகள் பழுதுபார்க்கும் பணிகள் 40 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் 

தொல்லியல் துறை

  1. சிந்துவெளி முத்திரைகளுக்கும் குடியீருகளுக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்ய பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் மற்றும் தமிழ் எழுத்துகளை ஆவணப்படுத்துதல், மின்பதிப்பாக்கம் பணிகள் 77 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் 
  2. தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியக நிறுவனத்தில் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியம் என்னும் முதுநிலைப்பட்டப்படிப்பு 80 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும் 
  3. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை சுற்றுலா தளங்களாக மேம்படுத்த உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் 3 கோடியில் மேற்கொள்ளப்படும் 
  4. அண்மையில் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை 65 லட்சம் செலவில் மறுசீரமைக்கப்படும் 
  5. முற்கால பாண்டியர் கால 10 குடைவரை கோயில்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்படும் 
  6. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உதிரி சிற்பங்கள், கல்வெட்டுக்களை அதே இடத்திலோ அல்லது பாதுகாப்பான பிற இடத்திலோ வைத்து முறையாக பாதுகாக்க மாநில அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் 
  7. ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் சிந்துவெளி ஆய்வு மையத்திற்கு அகழாய்வு மற்றும் தொல்லியல் துறையால் உருவாக்கப்பட்ட அறிவுச்செல்வத்தினை அடையாளம் காணுதல், பாதுகாத்தல், பரப்புதலுக்காக 89 லட்சம் மானியமாக வழங்கப்படும் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget