மேலும் அறிய
விமானப் பயணத்தில் மணந்த மதுரை ஜோடி : நெட்டிசன்களின் வாழ்த்துக்களும், ட்ரோல்களும்
விமானத்தில் திருமணம் முடித்துக்கொண்ட ஜோடிக்கு பலரும் வாழ்த்துச்சொல்லி வரும் நிலையில் நெட்டிசன்கள் சிலர் இவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.

விமானத்தில் திருமணம்
கொரோனா இரண்டாம் அலை பரவிவரும் வேளையில், பலரும் எளிமையான திருமணத்தை நாடும் நிலையில், விமானத்தில் திருமணம் முடித்துக் கொண்ட ஜோடிக்கு பலர் வாழ்த்துச் சொல்லும் நிலையில் நெட்டிசன்கள் சிலர் இதனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மோசமான கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. தமிழகம் உள்ளிட்ட நோய் பரவல் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் கூடுதல் கட்டுப்பாடு விதித்துவருகின்றன. தமிழக அரசும் கொரோனா முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

தளர்வுகளற்ற ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலான ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர்கள் உட்பட கூடுதல் பொறுப்பு வகிக்கும் நபர்கள் கலந்துகொண்டனர். முழு ஊரடங்கை முழுமையான அளவில் பின்பற்றப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் இன்று மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் எந்த விதமான தனிமனித இடைவெளியுமின்றி காய்கறிகளை வாங்கி சென்றனர். மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி காய்கறிகளின் விலை 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது. நேற்று கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கத்தரிக்காய் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 50 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இப்படி அனைத்து காய்கறிகளின் விலையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மளிகை கடை, ஜவுளிக்கடை என அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகளவு இருந்தது.

மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்து பல்வேறு திருமணங்கள் அவசர அவசரமாக இன்றையே தினமே நடத்தப்பட்டது. ஆங்காங்கே மண்டபங்களில் குறைந்த அளவு ஆட்கள் அனுமதியுடன் திருமணங்கள் நடந்து முடிந்தன. இந்நிலையில் மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் - தீக்ஷனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக சம்பிரதாயபடி மணமகன் - மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் முடித்தனர். இதையடுத்து இருவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசிபெற்றுகொண்டனர்.

விமான பயணம் என்பதால் விமானம் ஒரு மணிநேரம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையை சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் பயணத்தின்போது திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விமானத்தில் திருமணம் முடித்துக்கொண்ட ஜோடிகளுக்கு பலரும் வாழ்த்துச் சொல்லும் நிலையில் நெட்டிசன்கள் சிலர் இதனை ஆடம்பரமென்றும், பொறுப்பற்ற செயலென்றும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion