மேலும் அறிய

Ramadoss On NEET Exam : ‘நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன?’ பாமக நிறுவனர் இராமதாசு கேள்வி..!

'நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 100 நாட்கள் நிறைவடையவுள்ளன. ஒரு சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கான கால அவகாசத்தை விட இது பல மடங்கு அதிகம்’

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 100 நாட்கள் ஆன நிலையில், அது தொடர்பான விவரங்களை தமிழக அரசு மக்களுக்கு விளக்கம் வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்
Ramadoss On NEET Exam : ‘நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன?’ பாமக நிறுவனர் இராமதாசு கேள்வி..!
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நாளை 21ஆம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. ஆனால், நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் கிடைப்பதற்கான அறிகுறிகள்  கூட தென்படவில்லை. இத்தகைய நிச்சயமற்ற நிலை நிலவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்காது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சட்ட முன்வரைவை ஆதரித்து வாக்களித்தன. சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டதைத் தவிர்த்து, இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
Ramadoss On NEET Exam : ‘நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன?’ பாமக நிறுவனர் இராமதாசு கேள்வி..!
முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 100 நாட்கள் நிறைவடையவுள்ளன. ஒரு சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கான கால அவகாசத்தை விட இது பல மடங்கு அதிகம் ஆகும். நுழைவுத் தேர்வுகளில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத்தை இயற்றிய அனுபவம் தமிழகத்திற்கு ஏற்கனவே உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு முதன்முதலில் 1984-ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அதை ரத்து செய்வதற்கான சட்டம் கடந்த 2006-ஆண்டு திசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த சட்டத்திற்கு ஆளுனர், மத்திய அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, 2007-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் நாள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நடைமுறைகள் அனைத்தும் மொத்தமாக 86 நாட்களில் நிறைவடைந்து விட்டன. இது தான் சரியான கால அவகாசமாகும்.Ramadoss On NEET Exam : ‘நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன?’ பாமக நிறுவனர் இராமதாசு கேள்வி..!
ஆனால், இப்போது நீட் விலக்கு சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு நாளையுடன் 100 நாட்களாகும் நிலையில், அதற்கு ஆளுனரின் ஒப்புதல் கூட கிடைக்கவில்லை. இத்தாமதம் எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல. ஒரு சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நிறைவேற்றப்பட்டு  இருந்தால் அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதை உறுதி செய்ய ஓரிரு நாட்கள் போதுமானது. ஒரு வேளை பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுனருக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அது குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை பெறலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றினால் கூட ஓரிரு வாரங்களில் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட முடியும். ஆனால், 100 நாட்களாகியும் நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததற்கு அரசியலைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி தமிழக ஆளுனர்  ஆர்.என்.ரவி அவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு  எந்தப் பயனும் இல்லை. அதன்பின் நவம்பர் 27-ஆம் தேதி முதலமைச்சர் மீண்டும் ஆளுனரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார். சட்டப்பேரவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனும் கடந்த 17-ஆம் தேதி இது தொடர்பாக ஆளுனரை சந்தித்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.  தமிழக ஆளுனர் இனியும் தாமதம் செய்யாமல் நீட் விலக்கு சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
 
Ramadoss On NEET Exam : ‘நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன?’ பாமக நிறுவனர் இராமதாசு கேள்வி..!
ஆளுநர் ஆர்.என்.ரவி

அதே நேரத்தில் ஆளுனர் மாளிகை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை மட்டுமே காரணம் காட்டி,  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் கடமையிலிருந்து தமிழக அரசு விலகி விடக்கூடாது.  நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது எளிதானது அல்ல என்பது அனைவரும் அறிந்தது தான். முந்தைய அதிமுக ஆட்சியில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களை மத்திய அரசு ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியது. அதை நன்றாக அறிந்து தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கி  நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு அட்டவணை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படக்கூடும். அதற்கு முன்பாக அடுத்த ஆண்டில் தமிழகத்தில் நீட் உண்டா... இல்லையா? என்பதை தமிழக அரசு உறுதிபட தெரிவிக்க வேண்டும். ஆளுனரைக் காரணம் காட்டி, நீட் விலக்கை  தமிழக அரசும் காலவரையரையின்றி தாமதப்படுத்திக் கொண்டே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Ramadoss On NEET Exam : ‘நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன?’ பாமக நிறுவனர் இராமதாசு கேள்வி..!

நீட் விலக்கு சட்டத்தின் இப்போதைய நிலை என்ன? அதற்கு ஆளுனரில் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை அனைத்து நிலைகளிலும் ஒப்புதல் பெற தமிழக அரசு என்ன செயல்திட்டம் வைத்துள்ளது? எவ்வளவு காலத்திற்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும்? வரும் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் உண்டா... இல்லையா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். நீட்டுக்கு விலக்கு பெறும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அனைத்து வழிகளிலும் ஒப்புதல் அளிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறவும், தமிழ்நாட்டு மாணவர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget