(Source: ECI/ABP News/ABP Majha)
National Sports Awards 2022: "மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்..." சரத்கமல், இளவேனில், பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் பாராட்டு
கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருது பெற்ற சரத்கமல், பிரக்ஞானந்தா மற்றும் இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இன்று தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமலுக்கு இந்திய விளையாட்டு உலகின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜூனா விருதும், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜூனா விருதும் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இவர்கள் மூன்று பேருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "பர்மிங்காம் காமன்வெல்த் 2022ல் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமல் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
#B2022-இல் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த @sharathkamal1 அவர்கள் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் #KhelRatna விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். pic.twitter.com/DR8xKnsx1d
— M.K.Stalin (@mkstalin) November 14, 2022
#ArjunaAwards-க்குத் தேர்வாகியுள்ள இளம் செஸ் புயல் @rpragchess, துப்பாக்கிச்சூடு வீராங்கனை @elavalarivan ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்.
— M.K.Stalin (@mkstalin) November 14, 2022
தகுதிவாய்ந்த மூவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்ன ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்!
அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள். தகுதிவாய்ந்த மூவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்ன ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்."
இவ்வாறு அவர் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2006 மெல்போர்ன் காமன்வெல்த் கேம்ஸ், அதே போட்டியில் குழு பிரிவில் தங்கம் வென்றார் சரத் கமல். 2010 டெல்லி காமன்வெல்த், 2018 கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் ஆகிய போட்டிகளில் தங்கம் வெனறார். இந்த ஆண்டு பிர்பிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர், ஆடவர் குழு, கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார் சரத் கமல்.
2014 கிளாஸ்கோ ஆடவர் இரட்டையர் பிரிவிலும், 2018 கோல்டுகோஸ்ட் ஆடவர் இரட்டையர் பிரிவிலும், பிர்பிங்ஹாம் ஆடவர் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார் சரத் கமல்.
இதுதவிர 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
சரத் கமல் 4 வயதில் இருந்தபோது டேபிள் டென்னிஸை அவரது தந்தை அறிமுகப்படுத்தினார். சரத் கமலின் தந்தையும், அவரது உறவினர் முரளிதர் ராவும் ஆட்ட நுணுக்கங்களை சரத் கமலுக்கு கற்றுக் கொடுத்தார்.
அப்போது முதல் சிறப்பாக விளையாடத் தொடங்கினார் சரத் கமல்.