Watch video : விளையாட ஓடிவந்த 2 வயது குழந்தை.. வேகமாக ரிவர்ஸ் வந்த கார்! கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!
நாமக்கல் மாவட்டத்தில் 2 வயது சிறுவன் மீது இரண்டு முறை கார் ஏறி இறங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 2 வயது சிறுவன் மீது இரண்டு முறை கார் ஏறி இறங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் ராசிபுரம் அருகே பட்டணம் என்ற இடத்தில் தருண் என்ற 2 வயது சிறுவன் தனது தந்தையின் கடைக்கு அருகில் உள்ள வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வேகமாக சென்ற சிவப்பு கார் ரிவர்ஸ் எடுக்கப்பட்டது. அப்பொழுது, காருக்கு பின்னால் விளையாடிக் கொண்டிருந்த தருண் மீது மோதியது. மோதிய வேகத்தில் கீழே விழுந்த தருண் வலது பக்கம் இருந்த பின்னால் சக்கரத்தில் அருகே விழுந்தது.
மேலும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
இதையறியாத கார் டிரைவர் அந்த குழந்தையின் மீது காரை ஏற்றி ரிவர்ஸ் எடுத்தார். தொடர்ந்து, வலியில் கதறிய 2 வயது குழந்தையின் அழுகுரல் கேட்காமல் மீண்டும் குழந்தையின் வயிற்றில் முன்பக்கமாக ஏற்றி சென்று காரை நிறுத்தினார். தூரத்தில் இந்த கொடூர சம்பவத்தை பார்த்த ஒருவர் கத்திக்கொண்ட வேகமாக ஓடி வது குழந்தையை தூக்கினார். டிரைவரும் தொடர்ந்து வந்து குழந்தைக்கு அருகில் ஓடிவந்த வீடியோ வெளியாகியுள்ளது.
#WATCH#TamilNadu: #Namakkal boy, 2, survives after car runs over him twice within a few seconds https://t.co/C82Ye3JfBx pic.twitter.com/Y6YIgmFgh5
— The Times Of India (@timesofindia) June 12, 2022
உடனடியாக காயம்பட்ட குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தைக்கு முதலில் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், குழந்தையின் குடல் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
மேலும், குழந்தையின் முதுகுத் தண்டு மற்றும் விலா எலும்பில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தற்போது ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்