மேலும் அறிய

ஏழை மாணவர்களின் சத்துணவில் விளையாட்டா? முட்டையில் முறைகேடு.. தவெக அரசை அலர்ட் செய்யும் நயினார்

சத்துணவு முட்டை முறைகேடு: மாணவர் நலன் காக்குமா தமிழக அரசு? பாஜக கேள்வி

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளில் தொடரும் முறைகேடுகள் தொடர்பாக தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு கிடந்ததாகவும், தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதி அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவர்களின் ஆரோக்கியத்தையும், பெற்றோர்களின் நம்பிக்கையையும் ஒருசேர சீர்குலைக்கும் இதுபோன்ற செய்திகளை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது. அதுமட்டுமன்றி, தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் அனைத்தும் 'ஏ' தரம் (Agmark A grade) மற்றும் குறைந்தபட்சம் 46 கிராம் எடை கொண்டவைகளாக இருக்க வேண்டும் என்ற விதிகள் இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற குளறுபடிகள் எப்படி தொடர்கின்றன? அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களின் கோழிப்பண்ணைகளில் இருந்து தரமற்ற முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா? கொள்முதல் செய்யப்படும் முட்டைகள் முறையாக பதப்படுத்தப்படுகின்றனவா? அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு முட்டைகள் வழங்கப்படுகின்றனவா? அல்லது, மாணவர்களுக்கென ஒதுக்கப்படும் சத்துணவு முட்டைகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றனவா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு அரசு சார்பில் இருந்து முறையான விளக்கம் தேவை. முந்தைய திமுக ஆட்சியைப் போலவே, எளிய பின்புலம் கொண்டவர்கள் பெருமளவில் படிக்கும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில், தற்போதைய அரசும் சமரசம் செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏழை மாணவர்களின் சத்துணவில் விளையாட்டா? முட்டையில் முறைகேடு.. தவெக அரசை அலர்ட் செய்யும் நயினார்
 
திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த முதல்வரின் காலை உணவின் திட்டத்தின் பெயரை மாற்றி தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு காமராசர் காலை உணவுத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த காமராசரின் பெயரே இந்தத் திட்டத்திற்கு வைக்கப்பட்டதை வரவேற்கும் அதே நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
 
Advertisement

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Embed widget