காஞ்சிபுரத்தில் மணல் லிங்கம் வழிபாடு: முடவன் முழுக்கு திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! அறியாத தகவல்கள் இதோ!
Kanchipuram Festival: "காஞ்சிபுரம் பாலாற்றில், முடவன் முழுக்குத் திருவிழா இதற்கு விமர்சியாக நடைபெற்றது"

முடவன் முழுக்குத் திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் மணல் லிங்கம் வடிவமைத்து ஆயிரக்கணக்கானோர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காா்த்திகை முதல் நாள் முன்னிட்டு முடவன் முழுக்குத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் மணல் லிங்கம் அமைத்து வழிபாடு.
முடவன் முழுக்குத் திருவிழா
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி விமர்சையாகக் கொண்டாடப்படும் முடவன் முழுக்குத் திருவிழா இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஐதீகம் கூறுவது என்ன ?
புராணங்களின்படி, ராமேஸ்வரத்தில் வசித்த முடவன் ஒருவன் காவிரியில் துலாஸ்தானம் செய்ய ஆசைப்பட்டபோது, சிவபெருமானும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் அவனுக்குக் காட்சியளித்த நாள் கார்த்திகை முதல் தேதி. இந்த நிகழ்வின் நினைவாகவே முடவன் முழுக்குத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாள் புண்ணிய நதிகளில் நீராடினால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மணலில் வடிக்கப்பட்ட சிவலிங்கம்
திருவிழாவையொட்டி, இந்த ஆண்டு காலை முதலே காஞ்சிபுரம் பாலாற்றில் பொதுமக்கள் குவியத் துவங்கினர். குடும்பத்துடன் வந்திருந்த மக்கள், ஆற்றில் இருந்த தண்ணீரைக் கடந்து புனித நீராடினர். அதன் பிறகு, ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான சிவனடியார்களுடன் பொதுமக்களும் பக்தியுணர்வுடன் மணலில் லிங்கங்களை வடிவமைத்தனர்.
காஞ்சிபுரம் பாலாற்றில் செய்யப்பட்ட மணல் லிங்கங்களுக்கு அருகில் பூஜைப்பொருட்களை வைத்து, மலர்கள் சூட்டி, சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். வழிபாடுகள் முடிந்த பிறகு, நெற்றிக்கடன் வைத்திருந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப மற்ற பொதுமக்களுக்கு தாலி மற்றும் துணிகள் ஆகியவற்றை வழங்கினர்.
மேலும், பொதுமக்கள் புனிதமாகக் கருதப்படும் இந்த பாலாற்றுத் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். முடவன் முழுக்குத் திருவிழாவானது பக்தி, பாரம்பரியம் மற்றும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகச் சிறப்பாக நடைபெற்றது.




















