மேலும் அறிய

மருத்துவர் இல்லாததால் தாய் சேய் உயிரிழந்த விவகாரம் - நஷ்ட ஈடு கேட்ட வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் பதில் தர உத்தரவு

மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் மகள் மற்றும் அவரது குழந்தை இறந்த வழக்கில் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க கோரிய மனு.

தூத்துக்குடி மாவட்டம் கீழபாறைபட்டியைச் சேர்ந்த முருகம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனது மகள் கவிதாவிற்கும் தஞ்சாவூர், சூலமங்கலத்தைச் சேர்ந்த ராம்கி என்பவருக்கும் கடந்த 22-02-2021 அன்று திருமணம் நடைபெற்றது. பின் பிரசவத்திற்காக எனது மகளை எங்கள் ஊருக்கு அழைத்து வந்து கவனித்து வந்தேன். இந்நிலையில் கடந்த 12.02.2022 அன்று அதிகாலை 5 மணியளவில் எனது மகள் கவிதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டதால் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தேன்.12.02.2022 அன்று காலை 10 மணியளவில் எனது மகளை பரிசோதித்த மருத்துவர் எனது மகள் நல்லநிலையில் உள்ளார், சுகபிரசவம் நடைபெறும், இங்கு எல்லா வசதியும் உள்ளது என்றும் கூறினார்கள்.

மருத்துவர் இல்லாததால் தாய் சேய் உயிரிழந்த விவகாரம் - நஷ்ட ஈடு கேட்ட  வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் பதில் தர உத்தரவு

இந்நிலையில் 13.02.2022 அதிகாலை 2 மணியளவில் எனது மகளுக்கு பிரசவவலி ஏற்பட்டதால் பணியிலிருந்த செவிலியர் "டாக்டர் வருவார், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்" என்றும் கூறிவிட்டு கத்தி மற்றும் சில மருத்துவ உபகரணங்களுடன் பெண் உதவியாளருடன் எனது மகளை பிரசவ அறைக்கு உள்ளே அழைத்து சென்றார்கள். சிறிது நேரத்தில் எனது மகளுக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது என கூறினார்கள். அதனை தொடர்ந்து எனது மகளின் உடல்நிலை மோசமாகவும் இரத்தப்போக்கு நிற்காமல் தொடர்ந்து வந்ததாலும் ஆம்புலன்ஸ் மூலம்  திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு எனது மகள் இறந்து விட்டார் என மருத்துவாகள் தெரிவித்தார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் கொண்டு சிகிச்சை அளித்ததால் எனது மகள் மற்றும் அவரது குழந்தை இறந்துள்ளனர்.

எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கு குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் செவிலியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தமிழ்நாடு ஒப்பந்த சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

மதுரையை சேர்ந்த சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்திலுள்ள பேரூராட்சிகளில் தேவையான உதிரிபாகங்கள் குறிப்பாக தெருவிளக்குகள், குப்பைத் தொட்டிகள், தண்ணீர் விநியோகம் செய்ய தேவையான பொருட்கள் போன்ற பல பொருள்களுக்காக ஒப்பந்தங்கள் கோரப்படும்.

இதுபோன்ற ஒப்பந்தங்கள் விடும் போது தமிழ்நாடு ஒப்பந்த சட்டத்தின்படி ஏற்கனவே ஒப்பந்தங்கள் எடுத்த நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு ஒப்பந்த சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை.எனவே, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள பேரூராட்சிகளில் ஒப்பந்தங்கள் வெளியிடும் பொழுது முந்தைய ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், ஒப்பந்த அறிவிப்பு வெளியிடவும், இ-டெண்டர் முறையில் ஒப்பந்தம் நடத்தவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு ஒப்பந்த சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தங்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget