மேலும் அறிய

EB எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு: தகவல் சொன்ன மின்சாரத்துறை அமைச்சர்

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி  வரை கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்பு தாரர்கள் இருப்பதாகவும் இன்று காலை 11:00 மணி நிலவரப்படி ஒரு கோடியே 3 லட்சம் பேர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இதில் 51 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 52 லட்சம் பேர் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த மாதம் 31ம் தேதி வரை மின் இணைப்பு தாரர்கள் தங்களது எண்ணுடன் ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களிலோ அல்லது அந்தந்த மின் கோட்டை வாரிய அலுவலகங்களிலோ தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். 

25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்த பணியானது நடைபெறாது. சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்து வருவதாக தெரிவித்தார்.

மின் வாரிய ஊழியர்களுடன் மின்வாரிய நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், ஊழியர்களின் எண்ணப்படி மின் வாரியத்தை செயல்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். மேலும் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த மின் வாரிய நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மின்வாரிய வருவாயை கடந்த ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் வரக்கூடிய துறையாக மாற்றி, 13 கோடியே 71 லட்ச ரூபாயாக வருவாய் அதிகரித்து உள்ளது.

மின்வாரியம் வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் 84 கோடி ரூபாய் செலவு மிச்சமாகி, மின்சார துறை சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், 7 டிவிஷனில் புதைக்கப்பட்ட கம்பிகள் பதிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.  முறைகேடுகளை கண்டுபிடிக்கவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

ஆதார் எண்ணை இணைத்தாலும் தற்போது உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சிறப்பு முகாமுக்கு வருவோர் மின் இணைப்பில் தரப்பட்டுள்ள செல்போன் எண்ணுடன் வந்தால் எளிதாக ஆதாரை இணைக்கலாம். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளை வைத்திருப்பவர்களும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget