TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டம்? இன்றைய வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 15.12.2022 முதல் 18.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குழித்துறை (கன்னியாகுமரி) 5, சிவகாசி (விருதுநகர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 3, தேக்கடி (தேனி), பாபநாசம் (திருநெல்வேலி), மயிலாடி (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), காட்பாடி (வேலூர்), ஆயிக்குடி (தென்காசி), சாத்தூர் (விருதுநகர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), கன்னியாகுமரி, கடல்குடி (தூத்துக்குடி), கொட்டாரம் (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2, உசிலம்பட்டி (மதுரை), தென்காசி, ராஜபாளையம் (விருதுநகர்), ராதாபுரம் (திருநெல்வேலி), கல்லிக்குடி (மதுரை), குப்பணம்பட்டி (மதுரை), விளாத்திகுளம் (தூத்துக்குடி), சோலையார் (கோவை), சோத்துப்பாறை (தேனி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), சின்னக்கல்லார் (கோவை), சிவகிரி (தென்காசி), புலிப்பட்டி (மதுரை), வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெரியார் (தேனி), காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்து திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 1 மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அந்தமான் கடல் பகுதிகள்: இன்று (15.12.2022) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 15.12.2022 & 16.12.2022 : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 16.12.2022 & 17.12.2022 : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: இன்று (15.12.2022) சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறையக்கூடும்.
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் : இன்று (15.12.2022) சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 16.12.2022 காலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் மீண்டும் குறைந்து 17.12.2022 காலை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் : இன்று (15.12.2022) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 15.12.2022 மாலை தொடங்கி 16.12.2022 மதியம் வரை காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் மீண்டும் குறைந்து 17.12.2022 காலை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் : இன்று (15.12.2022) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 16.12.2022 காலை முதல் 17.12.2022 காலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.