மேலும் அறிய

CM Stalin: 'சி.ஆர்.பி.எப். தேர்வு.. தமிழ்லயும் பரீட்சை வைங்க..' அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்..!

MK Stalin: சி.ஆர்.பி.எஃப். பணிக்கு தமிழிலும் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

சி.ஆர்.பி.எப். ஆன்லைன்  தகுதி தேர்வு தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

சி.ஆர்.பி.எப். தேர்வு

சி.ஆர்.பி.எப். கணினித் தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப்பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும்  என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் சி.ஆர்.பி.எப். (CRPF) 9 ஆயிரத்து 212 காவலர்கள் ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாகத் தங்களது கனிவான கவனத்தைக் கோருகிறேன். நமது அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும்போதிலும், மேற்கூறிய ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ்நாட்டினருக்கு எதிரானது:

சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கெனெக் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்புக் காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் ஆகும்.

தமிழிலும் தேர்வு வேண்டும்:

விருப்புவெறுப்பின்றி இந்த அறிவிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுடனும், அவர்கள் நாட்டின் துணைராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே, இதில் உடனடியாக தலையிட்டு இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சி.ஆர்.பி.எஃப்.-ல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் சி.ஆர்.பி.எப். அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் வாசிக்க.

CRPF Recruitment : 9,212 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்?

CRPF Recruitment 2023: 1.30 லட்சம் பணியிடங்கள்;மத்திய அரசுப் பணி; உள்துறை அமைச்சம் வெளியிட்ட அறிவிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Embed widget