MK Stalin Speech: நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?
MK Stalin Speech: நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என கோவையில் நடைபெற்ற மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் 55,000 பேர் இணைந்த விழாவில் தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என கோவையில் நடைபெற்ற மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் 55,000 பேர் இணைந்த விழாவில் தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.
MK Stalin Speech: கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, சூலூர் தொகுதி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன், முன்னாள் பாஜக மாநில மகளிரணி செயலாளர் மைதிலி வினோ உள்ளிட்ட 55,000 பேர்முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் முதல்வர் பேசியதாவது, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில சுயாட்சி நடந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சிறப்பான திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோம். குறிப்பாக மளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு. ஆவின் பாலில் மூன்று ரூபாய் குறைப்பு. நகைக்கடன்கள் தள்ளுபடி, கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, அரசுப்பணியில் தமிழ் கட்டாயம், வேளாணமைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம், நான் முதல்வன் உள்ளிட்ட திமுகவின் ஆட்சியில் கொண்டுவரப்ப்ட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
View this post on Instagram
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்
மேலும் சொல்லதாதையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் எனவும் கூறியுள்ளார். புதிதாக இணைந்துள்ள நீங்கள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள். அதற்கு முன்னதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகள் மற்றும் வரலாறு, சாதனைகளை தெரிந்துள்ளுங்கள். மாநிலம் தோறும் மாவட்டம் தோறும் நடைபெறும் திமுக கொள்கை விளக்க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உங்களை கருப்பு சிவப்பு மனிதனாக மாற்றிக்கொள்ளுங்கள். தமிழகத்தினை முதனமை மாநிலமாக மாற்ற உங்களை ஒப்படைத்துக்கொள்ளுங்கள். வெற்றி தோல்விகளைச் சந்தித்து ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம். தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோம். இன்று நடந்துள்ள இந்த நிகழ்வு கழக வரலாற்றில் பொன்னெழுத்தில் பதிக்கப்படவேண்டியது எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். இந்த விழா கோவை பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டியில் நடைபெற்றது.