நான் புடிச்ச முயலுக்கு 3 கால் என்று இருப்பவன் நான் இல்லை: பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் மாணியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் மாணியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “தமிழ்நாட்டில் நிலவும் அமைதிக்கு காரணம் என்னுடைய காவல்துறை தான். அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளரும். வேலைகள் வரும். கல்வி மேம்பாடு இருக்கும்.
பெண்களும் இளைஞர்களும் முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுத் துறை மேம்படும். உறபத்தியும் ஏற்றுமதியும் இருக்கும். சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். கோயில்கள் தழைக்கும். தமிழ்நாட்டில் நிலவும் அமைதிக்கு காரணம் என்னுடைய துறை காவல்துறை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி சாதனைகளுக்கு அடித்தளமிட்ட காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் நானும் தமிழ்நாட்டு மக்களும் என்றும் நன்றிக்குரியவர்கள்.
சட்டம் ஒழுங்கு சீராகவும் தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருப்பதால்தான் பெரிய அளவிலான சாதி சண்டைகளோ, மத கலவரங்களோ வேறு ஏதேனும் பெரிய கலவரங்களோ, வன்முறைகளோ நடப்பதில்லை. கலவரங்களை தூண்ட வேண்டும் என சிலர் நினைத்தாலும் தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்து விடுகிறார்கள்.
இதெல்லாம் நடந்தால்தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரி தூற்ற முடியும். சட்டம் ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்கள் ஆசையில் மண் தான் விழுந்துள்ளது.
குற்றம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். கவனக்குறைவாக சில தவறுகள் நடந்தால்கூட அது சுட்டிக்காட்டப்பட்டால் அதை உடனடியாக திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நான் புடிச்ச முயலுக்கு மூனு கால் என்று பிடிவாதமாக இருப்பவன் அல்ல நான். மக்களாட்சியில் எல்லோருடைய கருத்துக்களையும் கவனித்து சரியானவற்றை சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என நினைப்பவன் நான்.
இப்பக்கூட சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்பவருக்கு சொல்கிறேன். இது மணிப்பூர் அல்ல; காஷ்மீர் அல்ல; உத்தரபிரதேச கும்ப மேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை. இது தமிழ்நாடு. அதை மறந்துடாதீங்க” எனத் தெரிவித்தார்.





















