MK Stalin Demands: சென்னை வந்த பிரதமரிடம் முதலமைச்சரின் முக்கிய 5 கோரிக்கைகள் என்ன?
சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கோரிக்கைகளை வைத்தார்.
தமிழ்நாட்டில் 31 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று வரவேற்பு உரையாற்றினார். அதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு உரையாற்றினார். அதில் பிரதமர் மோடியிடம் சில முக்கிய கோரிக்கைகளை விடுத்தார்.
அதில், “தமிழ்நாட்டிற்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் வருகை தந்திருக்கும் இந்த நேரத்தில், மேலும் சில முக்கியமான கோரிக்கைகளைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் முன் வைக்க விரும்புகிறேன்.
- தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நாள் கடமைப்பட்டிருக்கிறேன்.
- 15-5-2022 அன்று வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய GST இழப்பீடு நிலுவைத்தொகையானது ஆயிரத்து 6 கோடி ரூபாய். 14 இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பல்வேறு மாநிலங்களின் வருவாயானது முழுமையாக சீரடையாமல் இருக்கக்கூடிய நிலையில், GST இழப்பீட்டுக் காலத்தை ஜூன் 2022-க்குப் பின்னரும், குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தரவேண்டும் என்றும் நான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வற்புறுத்திக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
- பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், உலகச் செம்பெமாழிகளில் இன்றளவும் சீரினமைத் திறத்துடன் உயிர்ப்போடு விளங்கும் தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.
- இறுதியாக,மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முறையைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது குறித்து சட்டம் நிறைவேற்றி, பாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதியை, விரைந்து வழங்கிட மாண்புமிகு பிரதபர் அவர்களை இந்தத்தருணத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
இக்கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்