மேலும் அறிய

MK Stalin on Covid19 : கிராமங்களில் காய்கறி விநியோகத்தை தடையின்றி உறுதிசெய்க : அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

நகர்ப்புறங்களில் அத்தியாசிய பொருட்கள் தொடர்புடைய துறைகள் மூலமாக காய்கறிகள் விற்பனை சிறப்பாக நடப்பதை போல, கிராமங்களிலும் நடப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, நேற்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லாத ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் 24-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வுகளும் இன்றி தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்ததன் அடிப்படையில், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

MK Stalin on Covid19 : கிராமங்களில் காய்கறி விநியோகத்தை தடையின்றி உறுதிசெய்க : அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

முதல்வர் ஏற்கனவே வழங்கிய அறிவுரையின்படி, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகள், ஆவின் நிறுவனம் மற்றும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு எந்த தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக வாகனங்களில் சென்று வணிகர் சங்கத்தினர் உதவியுடன் காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, நேற்று முதல் சென்னையில் 1,670 வாகனங்கள் மூலம் ஆயிரத்து 400 மெட்ரிக் டன்னும், இதர மாவட்டங்களில் 4 ஆயிரத்து 626 வாகனங்கள் மூலம் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 6 ஆயிரத்து 296 வாகனங்கள் மூலம் 4 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

MK Stalin on Covid19 : கிராமங்களில் காய்கறி விநியோகத்தை தடையின்றி உறுதிசெய்க : அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

இன்று நடைபெற்ற கூட்டத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்புடைய துறைகள் மூலமாக சென்னையிலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

 நகர்ப்புறங்களில் இந்த சேவை சிறப்பாக வழங்கப்படுவதை போல. கிராமப்புறங்களிலும் இந்த சேவை வழங்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். இன்று 13 ஆயிரத்து 96 வாகனங்கள் மூலம் 6 ஆயிரத்து 509 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகளையும், பழங்களையும் விநியோகம் செய்ய அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக வரும் நாட்களில் தேவையான காய்கறிகள், பழங்கள் போதுமான அளவில் தொடர்ந்து நியாய விலை கடைகளில் கிடைத்திட தொடர்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அறிவுரை வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Neeraj Chopra :  ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Neeraj Chopra :  ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே..” முடில டா சாமி.. மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Rajinikanth: ரஜினியிடம் அந்த கேள்விகள் மட்டும் கேட்கக்கூடாதாம்! சூப்பர்ஸ்டார் என்ன சொன்னாரு தெரியுமா?
Rajinikanth: ரஜினியிடம் அந்த கேள்விகள் மட்டும் கேட்கக்கூடாதாம்! சூப்பர்ஸ்டார் என்ன சொன்னாரு தெரியுமா?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Embed widget