மேலும் அறிய

அன்று செம்பரம்பாக்கம் ஏரி...இன்று சாத்தனூர் ; இவர் அதிமுக ஆட்சியை குறை சொல்கிறார் - கொதித்த அன்புமணி

அதிமுக ஆட்சியில் நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது. எங்கள் ஆட்சி அப்படி கிடையாது என்று போட்டார்கள்.‌ இன்று காலை 2 மணி அளவில் சாத்தனூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், திண்டிவனம், மரக்காணம் பகுதியில் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில் ,

பல்வேறு கிராமங்களில் மின்சாரம் கிடையாது உணவு கிடையாது, பல கிராமங்களில் இதுவரை அதிகாரிகள் சென்று சந்திக்கவில்லை. வடதமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளது. முதலமைச்சர் ஒரு சில இடங்களில், பார்வையிட்டுவிட்டு சென்னைக்கு சென்று விட்டார்.  இந்தப் புயல் வரும் என அரசுக்கு தெரியும், புயல் வருவதற்கு முன்பு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் வந்த பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. சென்னையை மட்டும் மையமாக வைத்து சென்னையில் 20,000 பேர் வேலை செய்து இருக்கிறோம் . சென்னையை குறி வைத்து வேலை செய்தார்கள்.  மயிலம் தாலுகாவில் 50 சென்டிமீட்டர் , திருவண்ணாமலை பகுதியில் 50 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்தங்கரையில் 52 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த பகுதியெல்லாம் மிக மோசமாக இருக்கிறது. மீட்பு பணிகளை வேகப்படுத்த வேண்டும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. 

தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம் மத்திய அரசு கொடுத்தால்தான் தருவோம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. தமிழக அரசு ஆண்டுதோறும் பட்ஜெட் போடுகிறார்கள் வருடம் தோறும், பேரிடர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது அதற்கும் சேர்த்து பட்ஜெட் போட வேண்டும். இது தமிழக அரசின் கடமை மத்திய அரசாங்கம் தர வேண்டும் என்று தட்டிக் கழிக்க கூடாது.

நேற்று முதலமைச்சர் Tweet போட்டிருந்தார், அதிமுக ஆட்சியில் நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது. எங்கள் ஆட்சி அப்படி கிடையாது என்று போட்டார்கள்.‌ இன்று காலை 2 மணி அளவில் சாத்தனூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டம் குறிப்பாக கடலூர் நகரத்தில் ஓரங்களில் உள்ள 90 விழுக்காடு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. 

தென்பெண்ணை ஆற்று படுகையில் மிகப்பெரிய வெல்லம் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து மக்களுக்கு தெரியவில்லை. இவர் அதிமுக ஆட்சியை குறை சொல்கிறார். இரண்டு பேரை தான் குறை சொல்ல வேண்டும். இது பெருமை சொல்லக்கூடிய காலம் கிடையாது, உதவி செய்ய வேண்டியகாலம். 

பல கிராமங்களில் மின்சாரம் இல்லை குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. அதிகாரிகள் தங்களது வேலைகளை வேகப்படுத்த வேண்டும். மரக்கணத்தில் உப்பளம் தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளார்கள். 

வருகின்ற காலம் மிக மோசமான காலம் 25 ஆண்டுகளாக நாங்கள் இதை சொல்லிக் கொண்டிருக்கிறோம். காலநிலை மாற்றத்தினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். இந்த புயல் சிறிய புயல் தான் இந்த புயலை, நான் நல்ல புயலாக பார்க்கிறேன். நிறைய ஏரிகள் நிரம்பியுள்ளன. ஆறுகள் மற்றும் ஓடைகள் அனைத்தும் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. வருங்காலங்களில் இதை திட்டமிட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருங்காலத்தில் எடுக்க வேண்டும்.

திண்டிவனத்தில் புதிதாக அரசு பேருந்து நிலையம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏரிக்குள் அவர்கள் பேருந்து நிலையத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் கடந்த ஆண்டு இது குறித்து எச்சரித்தேன். இந்த வேலையை நிறுத்துங்கள் என கலெக்டருக்கு நான் கடிதம் எழுதினேன். அந்த பேருந்து நிலையம் அருகே அரசியல் கட்சி சார்ந்தவர்கள் இடத்தை வாங்கியதால், அங்கு பேருந்து நிலையம் வரவேண்டும் என போட்டி போட்டார்கள் தற்போது அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. யாராவது ஏரியில் பேருந்து நிலையத்தை கட்டுவார்களா ?. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏரியில் தான் கட்டிருக்கிறார்கள் இது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். 

மிகப்பெரிய வெள்ளம் வருவதற்கான காரணம், ஏரிகள் தூர்வரப்படாமல் தூர்ந்து போய் உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் தண்ணீர் ஊருக்குள் வந்துள்ளது. கணக்கில் மட்டும் தூர்வாரி உள்ளார்கள், நான்கு ஐந்து ஆண்டுகளாக தூர்வாரவில்லை, கணக்கில் மட்டும்தான் அது இருக்கிறது.

வானிலை அறிக்கை முழுமையாக இல்லை. வானிலை அறிக்கை துல்லியமாக இருக்க வேண்டும்.‌ பலமுறை இதுகுறித்து சொல்லி இருக்கிறேன். சமீபத்தில் ஜெனிவா சென்று இருந்தேன் அங்கு 9:30 மணிக்கு மழை பெய்யும் என்று கூறினார் அந்த நேரத்தில் பெய்கிறது. அந்த நாட்டில் இருக்கும் தொழில்நுட்பங்கள் ஏன் நம் நாட்டில் வரக்கூடாது. மழைக்கு இல்லை என்றால் கூட புயல் குறித்து துல்லியமாக கணித்து சொல்லலாம் அல்லவா ? . விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று யாராவது சொன்னார்களா இதை சொல்லி இருக்க வேண்டும் அல்லவா ?. ரேடார் வைத்திருக்கிறோம் என்று சொன்னால் என்ன பிரயோஜனம். அதிகாரிகளுக்கும் 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என தெரியவில்லை மக்களுக்கும் தெரியவில்லை. துல்லியமான கருவிகளை வைத்து தெளிவாக வானிலை அறிக்கையை தெரிவிக்க வேண்டும். 

அதானி ரகசியம் சந்திப்பு குறித்த கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில் ,

இதுகுறித்து முதல்வரிடம் காலை கேட்டிருக்க வேண்டும். அதானி தொடர்பான பிரச்சனை தமிழ்நாட்டில் காது கிழியும் அளவிற்கு அமைதி நிலவுகிறது. இதுகுறித்து நாங்கள் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய பிரச்சனை இதுகுறித்து அறிக்கைகள் பேட்டிகள் கொடுத்திருக்கிறோமா- அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. நியூயார்க் நகரத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறை மீது ஊழல் செய்திருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 

இதுகுறித்து இதுவரை அதானே அவர் சந்தித்தார் என முதலமைச்சர் பதில் சொல்லவே இல்லை. இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சியினரும் வாயை திறக்கவில்லை. செல்வப் பெருந்தகை ஏன் hindenburg அதானி பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பிள்ளார் . எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எனக்கும் தமிழ்நாடு மின்சார துறைக்கும் சம்பந்தம் இருக்கிறது, ஏனென்றால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நான் மின்சார கட்டணம் செலுத்துகிறேன். 

இரண்டு ஆண்டு காலத்தில் நான் 28% அதிகமாக மின் கட்டணம் காட்டிக் கொண்டிருக்கிறேன். இவர்கள் செய்த ஊழல் காரணமாக நான் அதிகமாக கட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை போல் தமிழ்நாட்டில் இரண்டு கோடி குடும்பம் அதிகமாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள் , அதானி எனக்கு மாமனா மச்சானா ? அதானியை விசாரணை நடத்துங்கள் அதில் மாற்றுக்கருத்து கிடையாது.   தமிழ்நாடு மின்சார வாரியம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது என்றால் ? இது சம்பந்தமாக தமிழ்நாட்டில் பேசுவதற்கு ஆளே கிடையாதா ? கூட்டணி கட்சிகளுக்கு நாக்கு இல்லையா ?

வைகோ மீது நான் அதிக அளவு மரியாதை வைத்திருக்கிறேன். முதலமைச்சர் மூத்த அரசியல் தலைவரை இழிவுபடுத்திருக்கிறார் , அதுகுறித்து வைகோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதானி மோடி என பேசிக் கொண்டிருக்கிறார்‌. அதானி மற்றும் ஸ்டாலின் ரகசிய சந்திப்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு x தளத்தில் அதானையை ரகசியமாக ஸ்டாலின் சந்தித்தது இந்திய அளவில் trend ஆனாது. இவ்வளவு பெரிய ட்ரெண்டிங் நடந்தபோது ஊடகத்தில் ஒரு சின்ன செய்தி கூட வரவில்லை. 

இவ்ளோ பெரிய ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது ஏன் எதிர்க்கட்சித் தலைவர் அதை குறித்து பேசவில்லை . இதுகுறித்து யாரும் ஏன் பேசவில்லை? நாங்கள் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதனால் 2 கோடி குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதனால் மின்சாரத்துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையில் மக்களுக்கு நேரடி தொடர்புள்ளது. ஆனால் யாரும் அதானே பற்றி பேச மாட்டார்கள் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

செந்தில்பாலாஜி வெளியே வந்த தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில்,

நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற போது பிணையில் வந்த அடுத்த நாள் அவர் அமைச்சராக ஆனது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். இது ஜனநாயகம் கிடையாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். செந்தில் பாலாஜி சுதந்திர போராட்ட தியாகி போல் முதலமைச்சராக நடத்திக் கொண்டிருக்கிறார். என்ன ஆட்சி நடக்கிறது ? இதே முதலமைச்சர் ஆறாண்டுகளுக்கு முன்புதான் செந்தில் பாலாஜி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்  அவர் தியாகியாக மாறிவிட்டாரா ? . வருகின்ற 13-ஆம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வதால் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில்,

அம்பேத்கர் எங்களது கொள்கை தலைவர், அவரை ஒரு சிலர் பட்டியலின தலைவராக தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர் தேசிய தலைவர், மகாத்மா காந்தியை போன்று அவர் ஒரு தேசிய தலைவர். அவரைக் குறித்து நூல் வெளியிடுவது இதைவிட மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் ஏதாவது இருக்குமா ? அந்த நிகழ்ச்சியை திருமாவளவன் புறக்கணிக்கிறார் என்றால் அம்பேத்கருக்கு அவர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதானா ? இது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். நீங்கள் அம்பேத்காரா திமுக கூட்டணியா என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget