(Source: ECI/ABP News/ABP Majha)
RIP Vijayakanth: "கேப்டனின் துணிச்சலும், மனிதநேயமும் நம் நினைவுகளில் குடியிருக்கும்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேப்டனின் துணிச்சலும், மனிதநேயமும் என்றென்றும் நம் நினைவுகளில் குடியிருக்கும் என்று கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவையடுத்து, அவரது உடல் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி:
நல்லடக்கம் செய்யப்பட்ட அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய திருவுடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினோம்.
— Udhay (@Udhaystalin) December 29, 2023
முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க… pic.twitter.com/o84RHSUOBg
இதுதொடர்பாக, அவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய திருவுடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர்
மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினோம். முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்த் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் மனித நேயமும் - துணிச்சலும் நம் நினைவுகளில் என்றென்றும் குடிகொண்டிருக்கும். புகழ் வணக்கம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
குவிந்த தலைவர்களும், மக்களும்:
விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் குடும்பத்தினர், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கே லட்சக்கணக்கான அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்திய பிறகு இறுதி ஊர்வலம் மதியம் 2 மணியளவில் தொடங்கி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சித்தலைமை அலுவலகத்திற்கு மாலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது.
பின்னர் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது இறுதி அஞ்சலி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சிலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் படிக்க: RIP Vijayakanth : "எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே" கேப்டன் விஜயகாந்திற்கு முதலமைச்சர் புகழஞ்சலி!
மேலும் படிக்க: Vijayakanth Death:“ஒரு பெரிய சகாப்தம் முடிஞ்சு போச்சு” - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வாகை சந்திரசேகர், ராதாரவி