Minister Udhayanidhi Stalin: 3 கோப்புகளில் கையெழுத்திட்ட அமைச்சர் உதயநிதி...என்னென்ன தெரியுமா?
Minister Udhayanidhi Stalin: புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழக அரசின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். ஆனால் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் உதயநிதி அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
அதன்படி ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.தொடர்ந்து ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார்.
எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். pic.twitter.com/M43S8kRcFO
— Udhay (@Udhaystalin) December 14, 2022
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து வாழ்த்துப் பெற்ற அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சராக பதவியேற்றதற்காக உதயநிதிக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தலைமைச் செயலகம் சென்ற உதயநிதி
பதவியேற்புக்குப் பின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடம் சென்ற உதயநிதி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர் தலைமைச் செயலகம் சென்ற அவர் முறைப்படி அலுவல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அமைச்சராக 2022-23 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான கோப்பில் உதயநிதி கையெழுத்திட்டார். இதற்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டதற்கான கோப்பிலும், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரருக்கு ரூ.4 லட்சம் வழங்கும் கோப்பிலும் உதயநிதி கையெழுத்திட்டார்.