மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் ரூ. 4 கோடியே 75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
25 மகளிர் குழுவிற்கு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 85 ஆயிரம் ரூபாய் கடன் உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 316 பயனாளிகளுக்கு நான்கு கோடியே 75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.
திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட வடுவூரில் ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான உள் விளையாட்டரங்கை அவர் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூருக்கு வந்த அவருக்கு விளமல் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து திருவாரூர் சுற்றுலா மாளிகையில் நேற்று இரவு அவர் தங்கினார். இன்று காலை திருக்குவளையில் உள்ள கலைஞர் நினைவு இல்லமான அஞ்சுகம் படிப்பகத்திற்கு சென்று பார்வையிட்ட பின்பு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாற்று திறனாளிகள் துறை சார்பில் 16.10 லட்ச ரூபாயும் தாட்கோ சார்பில் 65 லட்ச ரூபாயும் ஊரக வளர்ச்சி துறை மகளிர் திட்டம் சார்பில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயும் மேலும் 25 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகையாக 1 கோடியே 82 லட்சத்து 85 ஆயிரம் என மொத்தம் 18 துறைகளின் கீழ் 248 பெண் 68 ஆண் என 316 பயனாளிகளுக்கு நான்கு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு சிறப்பு திட்ட செயலாக்கு வறுமை ஒழிப்பு ஊரக கடன் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்கள் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். மேலும் 25 மகளிர் குழுவிற்கு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 85 ஆயிரம் ரூபாய் கடன் உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தொழில்நுட்பம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion