மேலும் அறிய

Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை.. உடல்நிலையில் முன்னேற்றமா?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு மருத்துவ குழுவின் முழுமையான கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரின் நேற்றூ காலை 5 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், இதயத்துடிப்பு நிறுத்தப்படாமல் இதயத் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு பைபாஸ் இரத்தக்குழாய்கள் வைக்கப்பட்டு இதயத்தின் இரத்த ஓட்டம் மறுசீரமைக்கப்பட்டது.

அதன் பின் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேர சிகிச்சையில் உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய முதல் நாள் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவர்கள் தகவல்.

இருதயத்தில் இருந்த மூன்று அடைப்புகள் காரணமாக கரோனரி தமணி அறுவை சிகிச்சை அமைச்சர் செந்தில் பலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில் காவிரி மருத்துவமனையில் Advanced cardio care unit என்ற தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 24 மணி நேர வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் இருதயத்திற்கு 24 மணி நேரம் ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

24 மணி நேரத்திற்கு பின் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிப்பார். அதன் பின் செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு, இயக்கையாக சுவாசிக்க துவங்குவார்.  அதன் பின்னர் இதயம் படிப்படியாக தாமாகவே செயல்பட துவங்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுவரை ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு இருதய துடிப்பின் அளவு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.  24 மணி நேரத்திற்கு பின் வெண்டிலேட்டர் அகற்றப்பட்டி, நீராகாரம் மூலம் அவருக்கு உணவு வழங்கப்பட உள்ளது.  தற்போது இசிஜி பல்ஸ் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

அடைப்பு அகற்றபட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தம் மற்றும் இருதயத்துடிப்பு இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல், அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வலி நிவாரணி வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
Mattu Pongal 2026 Wishes: உழவனின் உற்ற நண்பனுக்கு மரியாதை; மாட்டுப் பொங்கலுக்கு வீரமிகு வாழ்த்துகள் லிஸ்ட்!
Mattu Pongal 2026 Wishes: உழவனின் உற்ற நண்பனுக்கு மரியாதை; மாட்டுப் பொங்கலுக்கு வீரமிகு வாழ்த்துகள் லிஸ்ட்!
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
Mattu Pongal 2026 Wishes: உழவனின் உற்ற நண்பனுக்கு மரியாதை; மாட்டுப் பொங்கலுக்கு வீரமிகு வாழ்த்துகள் லிஸ்ட்!
Mattu Pongal 2026 Wishes: உழவனின் உற்ற நண்பனுக்கு மரியாதை; மாட்டுப் பொங்கலுக்கு வீரமிகு வாழ்த்துகள் லிஸ்ட்!
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Embed widget