மேலும் அறிய

Senthil Balaji: ’தீர்ப்பில் உறுதி; ஆனால் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கட்டும்’ - செந்தில்பாலாஜி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைப்பதாக  தெரிவித்துள்ளது. 

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைப்பதாக  தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி  அமைச்சர் செந்தில் பாலாஜி க்கு சொந்தமான இடங்களில் சுமார் 17 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறிய சம்பவத்தில் நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 14 ஆம் தேதி நள்ளிரவில் அவர்  அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

ஆனால் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21 ஆம் தேதி காலை 5 மணிக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.  இதற்கிடையில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு அளிக்கப்பட்ட நீதிமன்ற காவல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில், இவ்வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள்  பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 

இதனையடுத்து மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அமர்வுக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என தெரிவித்தார். மேலும் எத்தனை நாட்கள் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும்  நீதிபதி சி.வி கார்த்திகேயன்  தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.  இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம்  ஜூலை 17 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த ஆட்கொணர்வு மனு  இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க வேண்டும் என்றும், 3வது நீதிபதி கார்த்திகேயன் முன்னதாக வழக்கை விசாரித்த உங்கள் அமர்வை அணுக சொன்னதையும் குறிப்பிட்டு அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருதரப்பு விவாதத்தை கேட்ட நீதிபதிகள் விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையில் எடுத்த பின்  நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அளித்த உச்சநீதிமன்றம் வழக்கை நாளை (ஜூலை 26) விசாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
Embed widget