கரூரில் பொதுமக்களுக்கு நீர், மோர், குளிர் பானங்களை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகபட்சமாக 104 டிகிரியை தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் கலந்துகொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள், இளநீர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகபட்சமாக 104 டிகிரியை தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்ட திமுக சார்பில் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளரும், மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள், இளநீர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கரூர், தோகை மலையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.
இந்தியாவின் சட்டை மேதை டாக்டர் அம்பேத்கார் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் தமிழக மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டின் கீழ் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாநகரச் செயலாளர் எஸ் பி கனகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் மகேஸ்வரி, பூவே ரமேஷ் பாபு, மண்டல தலைவர் ஆர் எஸ் ராஜா, கரூர் ஒன்றிய செயலாளர் ஆர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் பி.வி பாரத், மாநகராட்சி கவுன்சிலர் தேவி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை மரியாதை செய்தனர். இதே போல் சட்டமேதை அம்பேத்கர் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கரூர் பஸ் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெயராமன் தலைமையில் ஜனநாயகம் காப்போம் என்ற பெயரில் தாலுக்கா அலுவலகங்களில் இருந்து ஊர்வலமாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் சட்டமேதை அம்பேத்கர் படத்திற்கு தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் ராஜூ தலைமையில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சௌந்தர்ராஜன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அரசன் மாவட்ட தலைவர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் கரூர் மாவட்டம் தோகைமலை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தோகைமலை மேற்கு ஒன்றியம் சார்பாக தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தொகுதி துணைச்செயலாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் மணிவேல் சரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கட்சி கொடி ஏற்றி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்றனர்.
அதனை தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு தொகை மலை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் முகாம் பொறுப்பாளர் பாலகுமார், கலைச்செல்வன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போலி கட்சியின் சார்பாக பாதிரிப்பட்டி ,பில்லூர் , கல்லடை நாகனூர், சின்னையாம்பாளையம், கூடலூர், கல்லை, கழுகு ஆகிய ஊராட்சி பகுதிகளில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.