Annamalai - Senthil Balaji Tiff | ”மானமற்ற ஒருவன்..” ”மணல் திருடும் அமைச்சர்..” அண்ணாமலை - அமைச்சர் செந்தில் பாலாஜி வார்த்தைப்போர்..
ட்விட்டரில் வார்த்தை போரில் தொடர்ந்து ஈடுபடும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு பாஜக தலைவர் செந்தில் பாலாஜி.
ஊழல் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதுதொடர்பாக இருவரும் டுவிட்டரில் பெரும் வார்த்தை போரையே நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், 'மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்' என்றார் பெரியார்.
'Never argue with an idiot. They will drag you down to their level and beat you with experience' என்றார் Mark Twain.
படித்ததை உணர்ந்த நாள்’ என்று பதிவிட்டுள்ளார்.
'மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்' என்றார் பெரியார்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 22, 2021
'Never argue with an idiot. They will drag you down to their level and beat you with experience' என்றார் Mark Twain.
படித்ததை உணர்ந்த நாள்...
இதற்கு பதிலளித்த அண்ணாமலை போட்ட பதிவு, ‘மணல் திருடும் அமைச்சர் அவர்கள் என் மண்டையில் களிமண் என்கிறார். இருக்கட்டும், எனக்கு பெருமை தான், களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம் திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும்!!! நினைவிருக்கிறதா 11 மணி 05 நிமிடம் வாக்குறுதி’ எனப் பதிவிட்டுள்ளார்.
மணல் திருடும் அமைச்சர் அவர்கள் என் மண்டையில் களிமண் என்கிறார்.
— K.Annamalai (@annamalai_k) October 22, 2021
இருக்கட்டும், எனக்கு பெருமை தான், களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம்
திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும்!!!
நினைவிருக்கிறதா 11 மணி 05 நிமிடம் வாக்குறுதி😁#ResignEBMin
முன்னதாக, “திமுகவை சேர்ந்தவர், தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து ரூ.4000 கோடி முதல் ரூ.5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஒருவேளை அப்படி நடந்தால் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்” என்று தமிழக மின்துறை அமைச்சர் மற்றும் மின்துறை அதிகாரிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி விளக்கம் அளித்தார்.
Anna.
— K.Annamalai (@annamalai_k) October 20, 2021
More proof from your own @arivalayam party!
🙏. https://t.co/vSlF2Az6OY pic.twitter.com/sldDM5nByd
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்