மேலும் அறிய

Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?

Ponmudi speech : இந்திய படித்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் கட்டாயமாக திணிக்கப்படுவதை தான் எதிர்க்கிறோம் - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் இந்திய எதிர்ப்பு, தொகுதி மறு வரையறை மற்றும் கல்விக்கு நிதி புறக்கணிப்பு ஆகியவற்றை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

முதலில் உரையாற்றிய உயிர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்:

நாளை சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மத்தியில் உள்ள பாஜக, திமுக அரசை சீண்டி பார்க்கிறது. திமுக என்கிற எஃகு கோட்டையை தொட்டு பார்க்கலாம் என நினைத்தால் மோதி மண்டை உடைதுமே தவிர திமுகவுக்கு எந்த சேதாரமும் வராது. எத்தனையோ ஒன்றிய அரசை பார்த்த கட்சி திமுக. மிசா நெருக்கடியை தாண்டி மீண்டும் ஒரு மாநில கட்சி இருக்கிறது என்றால் அது திமுக மட்டும் தான். திமுகவை சீண்டி பார்த்தவர்கள் தான் சின்னாபின்னமாகியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...

நாற்பது நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றோம். இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, தமிழ் வாழ்க என சொல்வது டெல்லியில் உள்ளவர்களை கதிகலங்க செய்கிறது. அதனால்தான் திமுகவின் ஆட்சிக்கு, தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்கு இடர்பாடு செய்கிறார்கள். செத்துப்போன சமஸ்கிருதத்துக்கு கொடுக்கும் அக்கறை, செம்மொழியான தமிழ் மொழிக்கு கொடுக்கவில்லை என்ற கோபம் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் உள்ளது. திமுக கூட்டணி சிதராதா என சிலர் எதிர்பார்க்கிறார்கள். இதே நிலையை அடித்தால் நாளை திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் 39 வது நாடாளுமன்ற தொகுதியை 31-ஆக குறைக்க பார்க்கிறது. 40 தொகுதிகளிலும் தோற்றதன் எரிச்சல் காரணமாகவே தொகுதி குறைக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எத்தனை நாடாளுமன்ற தொகுதிகளை குறைத்தாலும், அதிகரித்தாலும் பாஜகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தரப்போகிற பரிசு பூஜ்ஜியம் என பேசினர்.

தொடர்ந்து உரையாற்றிய வனத்துறை அமைச்சர் பொன்முடி:

தமிழ் வளர வேண்டும். திருமணத்தில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுகிறார்கள் அது யாருக்காவது புரிகிறதா? ஆனால் தமிழில் பேசினால் தப்போ, சரியோ புரியும். இரு மொழியை நாம் கற்றுக் கொடுப்பதால் ஒன்றிய அரசு கல்விக்கு கொடுக்கும் நிதியை குறைக்கிறார்கள். மூன்றாவது மொழியை திணித்து அதில் தேர்ச்சி பெற்றால் தான் வேலையான சொல்வது நம் நாட்டில் அதனை ஒத்துக் கொள்ள முடியாது. எனவே இரு மொழி போதும் எனக் கூறுகிறோம். கல்வி வளர வேண்டும் அதற்கு இரு மொழி கொள்கை போதும்.

இதையும் படிங்க: கரண்ட் பிரச்சனையா...? தீர்வுக்கான நேரம் இதான்... சான்ஸ். விட்டு விடாதீங்க மக்களே...!

இந்திய படித்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் கட்டாயமாக திணிக்கப்படுவதை தான் எதிர்க்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைவாக உள்ளது காரணம் குடும்ப கட்டுப்பாடு. ஒன்றிய அரசு கூறியதை கடைப்பிடித்தோம் அதன் விளைவாக மக்கள் தொகை குறைந்துள்ளது. தமிழ்நாடு நன்றாக இருப்பதற்கு குடும்ப கட்டுப்பாடும் ஒரு காரணம். ஆனால் வட இந்தியாவில் இன்றைக்கும் அதிக குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இந்தி பேசுபவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அங்கு மக்கள் தொகை அதிகம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் 31 ஆக குறைந்து விடும். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா 39 தொகுதிகள் குறையாது என கூறுகிறார். அதே போல் மற்ற மாநிலங்களும தற்போதுள்ள எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும். தொகுதிகளை சதவீதத்தின் அடிப்படையில் உயர்த்தலாம் ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்தக் கூடாது. எல்லா மாநிலத்திற்கும் ஒரே சதவீதத்தின் அடிப்படையில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என பேசினார்.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
Embed widget