![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சமத்துவ பொங்கல் விழா... பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி
விழுப்புரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவபொங்கல் விழாவில் பறைஇசைக்கு அமைச்சர் பொன்முடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
![சமத்துவ பொங்கல் விழா... பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி Minister Ponmudi danced to drum music at the Samatwa Pongal function organized by DMK சமத்துவ பொங்கல் விழா... பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/79e4d3fec296cf85e5f5a589df6c853f1673888098007194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழரின் பாரம்பரிய இசையான பறையை அடித்து நடனமாடி பொங்கல் நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பறை இசைக்கு நடனமாடியது அங்கிருந்தவர்களை ஆரவாரப்படுத்தியது. விழுப்புரம் நகர திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு உயிர்களைத் துறை அமைச்சர் பொன்முடி இல்லம் அருகே சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோல போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அப்போது நிகழ்ச்சியின் துவக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பறை இசை வாசிக்கப்பட்ட போது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், திமுக விழுப்புரம் நகர செயலாளர் சர்க்கரை ஆகியோர் பறை இசைக்கு குத்தாட்டம் போட்டனர், இந்த நிகழ்ச்சி அங்குள்ள பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)