மேலும் அறிய

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் ஆவேசப்பட்ட அமைச்சர் பெரிய கருப்பன்... கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றதால் பரபரப்பு..!

ஊராட்சிகளில் நிதித்தட்டுப்பாடு என்பது முற்றிலுமாக இல்லை. எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் கூறுங்கள் என செய்தியாளரிடம் அமைச்சர் பெரிய கருப்பன் ஆவேசமடைந்து பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்தினார். 

மயிலாடுதுறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை தொடர்பான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் மகளிர்  சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 138 உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு 2.76 கோடி ரூபாய் கடனுதவியும் 442 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 15.50 ரூபாய் கோடி கடனுதவிகளையும் வழங்கினார். 

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் ஆவேசப்பட்ட அமைச்சர் பெரிய கருப்பன்... கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றதால் பரபரப்பு..!

அப்போது அவர் பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக முதன்முதலில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்தார். சமூக நலத்துறையில் இருந்த மகளிர் சுயஉதவி குழு பிரிவை ஊரக வளர்ச்சித்துறையோடு இணைத்தவர் கலைஞர். அவர் வழியிலேயே தமிழக முதல்வர் பெண்களின் வளர்ச்சியில் முனைப்போடு பல்வேறு திட்டங்கள் வாயிலாக பெண்களை ஊக்கப்படுத்தி வருகிறார். 

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் ஆவேசப்பட்ட அமைச்சர் பெரிய கருப்பன்... கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றதால் பரபரப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற ஆண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 300 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 303 கோடி கடன் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்ற ஆண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 21,260 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 25,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். 

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் ஆவேசப்பட்ட அமைச்சர் பெரிய கருப்பன்... கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றதால் பரபரப்பு..!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார். அப்போது ஊராட்சிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளை விட தற்போது குறைவான நிதி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறுவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆவேசம் அடைந்த அமைச்சர் பெரிய கருப்பன், தமிழகத்தில் நிதித்தட்டுப்பாடு என்பது முற்றிலுமாக இல்லை. தற்போது நிதி நிலைமை முழுவதும் சீராகிவிட்டது, எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் கூறுங்கள் என்றவர், தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல், ஒளிப்பதிவை நிறுத்துங்கள் என கூறி பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் ஆவேசப்பட்ட அமைச்சர் பெரிய கருப்பன்... கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றதால் பரபரப்பு..!

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்ஷினி, கூடுதல் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் மணிஸ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?

பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்

Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்

"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?

ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி

Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை

Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?

Embed widget