மேலும் அறிய
குறை தெரிவித்ததுமே நடவடிக்கை எடுத்த அமைச்சர் மா.சு; நன்றி தெரிவித்த பால் முகவர்கள் சங்க தலைவர்
அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுவதாக தெரிவித்த நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுவதாக தெரிவித்த நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக தெரிவித்த நிலையில் , உடனடியாக நடவடிக்கை உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு , தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது, அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்றைய தினம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை X வலைதளத்தில் பகிர்ந்திருந்த நிலையில் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில் பலரும் தொடர்ந்து மறு பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்றைய தினம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை X வலைதளத்தில் பகிர்ந்திருந்த நிலையில் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில் பலரும் தொடர்ந்து மறு பதிவேற்றம் செய்து வருகின்றனர். 1/9 @CMOTamilnadu @mkstalin @Subramanian_ma https://t.co/pXRAViOOus
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) June 12, 2024
இந்த நிலையில் எனது அனுபவ பதிவு முதலமைச்சரின் அரசியல் செயலாளர் தினேஷ் அவர்கள் மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் மரியாதைக்குரிய மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு சென்றிருந்த சூழலில் இன்று (12.06.2024) காலை 9.41மணியளவில் அமைச்சர் அவர்களே என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்தவை குறித்து விசாரித்ததோடு நடந்த அசெளகரியத்திற்கு வருந்துவதாகவும், நேற்றே தன்னை தொடர்பு கொண்டிருக்கலாமே..? எனவும் வருத்தப்பட்டார்.
அப்போது அவரிடம் பேசிய நான் ஒரு அமைப்பின் (தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்) நிறுவனத் தலைவராக அல்லாமல் சாமானிய மக்களில் ஒருவனாகவே அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றேன் என்பதையும், மற்ற அரசு மருத்துவமனைகளை விட பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதையும், வேர் சிகிச்சைக்காக இரண்டு மாதம் கழித்து தான் நோயாளிகள் வர வேண்டும் என்றால், அவர்களால் எப்படி வலியை தாங்கிக் கொண்டு இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்..? என்பதையும் அவரிடமே திருப்பி கேட்டதோடு, இந்த தகவல் தங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையிலேயே X வலைதள பக்கத்தில் பதிவு செய்தேன் என்பதையும் தெரிவித்தேன்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் மரியாதைக்குரிய மா.சுப்பிரமணியம் அவர்கள், தங்களின் பதிவு தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைத் தலைவர் (டீன்) மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவத்துறை சார்ந்த குறைகள் குறித்து X வலைதளத்தில் பதிவு செய்த விசயம் அறிந்த உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்தவை குறித்து விசாரித்ததோடு, ஏற்பட்ட அசெளகரியம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், எனது பதிவினால் அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாற்றம் நிகழ்ந்து ஒருவருக்கேனும் அது பயனளிக்குமானால் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அரசின் செவிகளுக்கு அந்த பதிவு சென்று சம்பந்தப்பட்ட பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது மட்டும் தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion