மேலும் அறிய

‛டிவி சீரியல் பார்க்காதீங்க... மாமியாரை கொலை பண்ண பிளான் தர்றாங்க...’ -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் பேச்சு!

டீவி சீரியல்கள் பார்ப்பதை தவிருங்கள். மாமியார், எப்படி கொல்ல வேண்டும் என ஒடுகிறது. நாட்டிற்க்கு அறிவு தான் தேவை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பணிபுரியும் பெண்கள் மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் பயன்பெறும் வகையில் நூலகத்தினை வருவாய்துறை அமைச்சர் KKSSR இராமசந்திரன் மற்றும் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுமான், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் பலர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய போது,

‛‛நூலகம் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைந்ததில் பெருமை அடைகிறேன். நான் துறைக்கு பொறுப்பேற்ற பின் மக்களின் மனதில் மாபெரும் மாற்றம், மற்றும் புரட்சியை ஏற்படுத்துவது நூலகம் என அறிந்தேன். இது துறை கிடையாது. தமிழகத்தில் 12,000 மேற்பட்ட ஊராட்சியில் நூலகம் உள்ளது. இது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கிழ் அமைந்துள்ளது பெருமையாக கருதுகிறேன்.  பல்வேறு நவீன வசதிகள் ஆன்லைனில் வந்தாலும் புத்தகம் தான் நமக்கு சிறந்தது. இது பெரிய மறுமலர்ச்சி தரும் என பேசினார். அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே பெரிய நூலகம். திறப்பு விழாவின் போது கலைஞரிடம் நான் வாசகம் கேட்ட போது, புத்தகத்திலே உலகத்தை படிப்போம். உலகத்தை புத்தகமாக்குவோம் என கலைஞர் கூறினார்,’’ என்று பேசினார்.

‛டிவி சீரியல் பார்க்காதீங்க... மாமியாரை கொலை பண்ண பிளான் தர்றாங்க...’ -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் பேச்சு!

பின்னர் வருவாய் துறை அமைச்சர்கேகேஎஸ்எஸ்ஆர்., பேசிய போது:

‛‛விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்மையாக மக்கள் தொகை, தொழில் சிறந்து விளங்கும் ஊராக இராஜபாளையம் உள்ளது. 50 வருடத்திற்க்கு முன் பெண்கள் ஆணாதிக்கத்துக்கு கீழ் இருந்தனர். தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி முயற்ச்சிக்கு பின் புத்தகம் படித்து சரிசமமாக மாற்றம் வந்துள்ளது.
அனைத்துறைகளிலும் பெண்கள் சரிசமமாக இருந்து வருகின்றனர். வேலை வாய்ப்பு வழங்கும் போது படித்ததில் யார் முதன்மை என பார்ப்பார்கள். குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். ஒரு குடும்பத்தில் பெண் படித்தால் அந்த குடும்பம் சிறக்கும். டீவி சீரியல்கள் பார்ப்பதை தவிருங்கள். மாமியார், எப்படி கொல்ல வேண்டும் என ஒடுகிறது. நாட்டிற்க்கு அறிவு தான் தேவை. நாம் நல்லபடியாக படித்தோம் என்றால் நம் குழந்தைகள் அறிவாக இருக்கும். பேருந்து பயணத்தில் மகளிருக்கு இலவசம் முதல்வர் அரிய  சிந்தனையோடு அறிவித்துள்ளார். பெண்கள் பேருந்து பயணத்தில் இலவசமாக சென்று வருவதால் செலவினை குறைக்கும் போது வீட்டின் குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வாங்கி செல்வர். பனத்தினை பாதுகாப்பாக சேமிப்பர். இதுவே ஆண்கள் கையில் பணம் மிஞ்சும் போது வேறு வழியாக சிந்தித்து வேறு இடத்திற்கு செல்வார்,’’ என அமைச்சர் பேசினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget