மேலும் அறிய

TN ELECTION 20206: தைலாபுரம் தோட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு! சசிகலா வருகை ஒருபுறம்... திமுகவிற்கு தாவும் பாமக எம்எல்ஏ மறுபுறம்?

Tn assembly election: தமிழ்நாடு 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை சந்தித்து சசிகலா தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

விழுப்புரம்: தமிழ்நாடு 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை சந்தித்து சசிகலா தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தங்கள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாமக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவின் விசாரணை தேர்தலுக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் ராமதாஸுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து விவாதிக்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் ராமதாஸ் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியிருந்தார். இதனிடையே, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கடந்த வாரம் தொடங்கியிருந்தார்.

இந்த நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்து தற்போது கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சசிகலா ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து கூட்டணி குறித்து இருவரும் இணைந்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

குறிப்பாக மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒவ்வொரு முறை நடைபெறும் நிர்வாக குழு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்து கொண்டிருந்த சேலம் எம்எல்ஏ அருள் கடந்த சில நாட்களாக திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று மருத்துவர் ராமதாசை சசிகலா கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜிகே மணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் எம்எல்ஏ அருள் மட்டும் புறக்கணித்துள்ளது தற்பொழுது பரபரப்பாகியுள்ளது. 

புதன்கிழமை அன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்திற்கு சேலம் அருள் எம்எல்ஏ வந்தபோது, சேலத்தில் சுயேட்சையாக போட்டியிடப் போகிறார்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காலம் தான் முடிவு செய்யும் என கூறிவிட்டு தைலாபுரம் தோட்டத்திற்கு உள்ளே சென்ற அவர் நிர்வாக குழு கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். இந்த சூழ்நிலையில்தான் தற்பொழுது ராமதாசுடன் சசிகலா நடத்தும் கூட்டணி பேச்சு வார்த்தையில் பங்கேற்காத நிலையில் அவர் திமுக விற்கு செல்ல உள்ள தகவல் வெளியாகி தைலாபுரம் தோட்டத்தில் பரபரப்பாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget