(Source: ECI/ABP News/ABP Majha)
Cauvery: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் - அமைச்சர் துரைமுருகன்; கர்நாடகா சொன்னது என்ன?
Duraimurugan Cauvery Issue: காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில், காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்:
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டமானது, டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டு அதிகாரிகள், கர்நாடக அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீர் குறித்தும் மழையின் அளவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கர்நாடக அரசு தெரிவித்தது என்ன?:
கர்நாடகாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது, இங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மழை இல்லை
தற்போது, கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் நீர் இருப்பு குறைந்த அளவிலேயே உள்ளது.
தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட்டால், கர்நாடகத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்து தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு:
தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் 174. 497 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 78.728 டி.எம்.சி தண்ணீர்தான் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளின் நீரின் அளவை கணக்கிட்டு, தமிழ்நாட்டுக்கு மே மாதத்தில் 25 டி.எம்.சி நீரை திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில், காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Also Read: Mettur Dam: வாட்டி வதைக்கும் வெயில்... மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?