மேலும் அறிய

Megha Dadu Dam Row: ‛மேகதாது அணையை தடுப்போம்’ அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணை கட்ட முயற்சித்தாலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என்று துரைமுருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேகதாது அணை கட்ட கர்நாடகா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியதற்கு துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை,

காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மேகதாது பிரச்சனைக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜுலை 4ஆம் தேதி கர்நாடக முதலமைச்சருக்கு எழுதிய பதில் கடிதத்தில் தமிழ்நாடு விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்கு காவேரி நீரையே நம்பியிருக்கும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். அதை செயல்படுத்தக் கூடாது என கடுமையாக வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Megha Dadu Dam Row: ‛மேகதாது அணையை தடுப்போம்’ அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரி குறுக்கே மேகதாதுவில் சட்டத்திற்குட்பட்டு அணை கட்டப்படும் என எடியூரப்பா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழ்நாட்டின் நீர்வள பிரச்னைகள் குறித்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் சொக்காவத்தை சந்தித்து பேசிய பின் தமிழ்நாடு இல்லத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செக்காவத் உடனான பேச்சுவார்த்தை மிக சுமூகமாக முடிந்தது. அவர் மிக அன்னோன்யமாக பழகினார். நாங்கள் கொண்டு சென்ற பிரச்னைகள் குறித்து அவர் ஏற்கெனவே நன்றாக தெரிந்து வைத்திருந்தார்” என்று கூறினார்.

மேலும், “கர்நாடக அரசு தற்போது காவிரியின் குறுக்கே கட்டிவரும் மேகதாது அணையை கட்டுவது தொடர்பாக எங்களிடம் அனுமதியோ, தகவலையோ சொல்லாமல், மத்திய நீர்வளத்துறையை நேரடியாக அனுகி அனுமதியை பெற்றுள்ளதை கஜேந்திரசிங் செக்காவத்திடம் கூறினேன். அதற்கு பதிலளித்த அவர், நீர்வளத்துறையிடம் அனுமதி வாங்குவதால் மட்டுமே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டிவிட முடியாது என என்னிடம் விளக்கினார். மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து நிச்சயமாக தமிழக அரசின் கருத்துகளை கேட்போம் என உறுதி அளித்துள்ளார்” என்றும் கூறினார்.

தமிழ்நாடு அரசின் மந்த நிலையை கருதிதான் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எங்களுக்கு மந்தமும் இல்லை மாந்தமும் இல்லை எனவும் துரைமுருகன் பதிலளித்தார்.

TN New Dam Issue: கர்நாடக புதிய அணைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்வு -துரை முருகன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget